அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தைக் காப்பாற்ற கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களின் ஜனநாயக உரிமைகளையும், அதிகாரங்களையும் பாதுகாக்க வேண்டிய தேவை கட்சிகளுக்கு உண்டு என்றும் வலியுறுத்தினார்.
'அதிகாரத்தினை பகிர்வதற்காக கை கோர்ப்போம்;13வது திருத்த சட்டத்தை பாதுகாப்பதற்காக அழுத்தம் கொடும்போம்’என்கிற மகஜரில் கையெழுத்திடும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சமூகங்கங்களிடையே அதிகாரத்தைப் பகிர்வதை உறுதிப்படுத்த வேண்டும். அதுவே, தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று புதன்கிழமை மாலை ‘13வது திருத்த சட்டத்தை பாதுகாப்போம்’ என்கிற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தது. அதில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்தார்.
0 Responses to 13வது திருத்த சட்டத்தை காப்பாற்ற ஒன்றிணைய வேண்டும் - ரணில்