Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முதல்வர் ஜெயலலிதா உதகையில் வருகிற 27ம் திகதி இப்தார் நோன்பு திறக்க அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஆனால்,இன்று அந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

ஜெயலலிதா சென்னையில் இருந்தால், வருடாவருடம் இப்தார் எனும் ரமலான் நோன்பு திறக்கும்  நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வழக்கம். இந்த வருடம், ஜெயலலிதா கொடநாடில் இருந்தபடி அரசு பணிகளை கவனித்து   வருவதால், உதகையில் நோன்பு திறக்க அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று ஏற்காடு எம் எல் ஏ பெருமாள் காலமாகிவிட்ட நிலையில், அவரது குடும்பதினரும், கழகத்தினர்  உட்பட தாமும் மீளாத் துயரில் இருக்கும் போது, தாம் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது சரியல்ல என்று, வருகிற 27ம் திகதி உதகையில் தாம் கலந்து கொண்டு திறக்க இருந்த இப்தார் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்காடு அதிமுக எம் எ;ல் ஏ பெருமாள் இறந்த காரணத்தால், அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் ஜெயலலிதா, தமது இரங்கல்  மேற்கண்ட தகவலையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழக முதல்வர் 27ம் திகதி உதகையில் திறக்க இருந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சி ரத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com