Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திடீர் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது ஒரு தாக்குதல் நடவடிக்கையா  என்பதில் சந்தேகம் தொடர்கிறது.
வெடிப்பு இடம்பெறுவதற்கு சிறுது நேரத்திற்கு முன்னதாக ஒருவர் சக்கரநாற்காலியில் அமர்ந்தவாறே வெள்ளைநிறப்பக்கெட்டு ஒன்றை கைகளில் உயர்த்திய படி காண்பித்த புகைப்படங்களை சீனாவின் மைக்ரோ பிளாக்கர் தளமான வெயிபோ பிரசுரித்துள்ளது. இதையடுத்து குறித்த நபர் தான் இக்குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுதுள்ளது.

குறித்த விமான நிலையப் பகுதி புகை மண்டலமாக காட்சிஅளிப்பதுடன், அங்கு காவல்துறை அதிகாரிகள் குவிந்துள்ளதை மேலும் சில புகைப்படங்கள் காட்சிப்படுத்தியுள்ளன. குறித்த நபர் சீனாவின் வடகிழக்கு மாகாணமான சாண்டோங்கை சேர்ந்த ஜி சோங்சிங் என சீனாவின் தேசியத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

0 Responses to சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு? : தொடரும் பரபரப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com