நெடுங்கேணிப் பகுதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக் கழக மாணவரான தேவராசா
பிரதீபன் என்கிற இளைஞர் இனந்தெரியாத குண்டர் குழுவினால் கடத்தப்பட்டு
தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் கடந்த 15ஆம் திகதி இரவு வீட்டிலிருந்த சமயம் நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களினால் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கடத்தப்பட்டுள்ளார். எனினும், அச்சத்தினால் விடயத்தை வெளியில் தெரிவிக்காது உறவினர்கள் அமைதி காத்துள்ளனர்.
கடத்தப்பட்ட பிரதீபன் மறைவிடமொன்றில் வைத்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சூடாக்கிய இரும்புக்கம்பி உள்ளிட்டவற்றினால் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அருகில் கொண்டுவந்து விடப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான தேவராசா பிரதீபன் இளம் குடும்பஸ்தவராவார். அவருக்கு குழந்தையொன்றும் உள்ளது. அவர் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவராக இன்னமும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாழ் பல்கலைக்கழக மாணவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்