Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இளம்றோயல்  விளையாட்டுக்கழகம்  நடாத்திய  மூத்த தாக்குதல் தளபதி லெப்,சீலன்,வீரவேங்கை ஆனந்த் ,மூத்த உறுப்பினர் லெப்.செல்லக்கிளி அம்மான் ஆகியோரின் 30வது ஆண்டு நினைவுகள் சுமந்த மாபெரும் உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி  14.07.2013  ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்து சூரிச் வின்ரத்தூர்   நகரில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
 
இம் மூன்று மாவீரர்களின் திருவுருவப்படங்களுடன், இன உணர்வாளர்,தமிழ் திரைப்பட இயக்குனர் மணிவண்ணன்  மற்றும்,  29.06.2013.அன்று ஸ்பானியாவில் அகாலமரணமடைந்த ஜேர்மனி துத்ட்ளின்கேன் விளையாட்டு வீரன் பிரகாஷ்  ஆகியோரினது திருவுருவப்படங்களும்  வைக்கப்பட்டு ஆரம்ப நிகழ்வு ஆரம்பமானது,பொதுச்சுடர்,ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு,மலர் வணக்கம், அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் போட்டிகள் ஆரம்பமானது,
 
சிறப்பான காலநிலை காணப்பட்டதால்  கழக வீர்கள் மிக உச்சாகமாக போட்டிகளில் கலந்து கொண்டனர்,     12 அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்,
 
இப் போட்டியில் முதலாவது இடத்தை வெற்றியீட்டிய லுர்சன் யங்க்பட்ஸ்.உதைபந்தாட்டக்கழகத்துக்கு மூதூர் தளபதி மேஜர்  கணேஸ் அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணமும், இரண்டாது இடத்தைவெற்றியீட்டிய சுக் தாய்மண் விளையாட்டுக் கழகத்துக்கு மூத்த உறுப்பினர் கப்டன் லாரா ரஞ்சன் அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணமும், மூன்றாவது இடத்தை வெற்றியீட்டிய  லிஸ் யங்க்ஸ்ரார் விளையாட்டுக்கழகத்துக்கு மட்டகளப்பு .தாக்குதல் தளபதி லெப்,பரமதேவா அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணமும், சிறந்த கழகத்திக்காக மூத்த உறுப்பினர் லெப்,செல்லக்கிளி அம்மான் நினைவு வெற்றிக்கிண்ணம்  பேர்ன் றோயல் விளையாட்டுக்கழகத்திக்கும், சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்ட சுக் தாய்மண்விளையாட்டுக்கழக வீரர் சீருடை இலக்கம்  9  கயா அவர்களுக்கு யாழ் மாவட்ட  சிறப்புத்தளபதி லெப் கேணல் மதி  அவர்களின் நினைவுக்கிண்ணமும் , சிறந்த பந்து காப்பாளராக தெரிவு செய்யப்பட்ட லுர்சன் யங்க்பட்ஸ்  உதைபந்தாட்டக்கழக வீரர் சீருடை இலக்கம் 1 அகிந்தன் அவர்களுக்கு லெப் கேணல் சரா நினைவுக்கிண்ணமும்,இறுதிபோட்டியின் சிறந்தவீரராகத் தெரிவு செய்யப்பட்ட லுர்சன் யங்க்பட்ஸ் உதைபந்தாட்டக்கழக வீரர் சீருடை இலக்கம்  28 வென்னிலனுக்கு லெப், கேணல் ராஜன் நினைவுக்கிண்ணமும், முதலாம் இடத்தை வெற்றிகொண்ட லுர்சன் யங்க்பட்ஸ் உதைபந்தாட்டக்கழகத்திக்கு  மூத்த தாக்குதல் தளபதி லெப் சீலன், வீரவேங்கை ஆனந்த் நினைவுச்சுற்றுக்கிண்ணமும் , அத்தோடு இப்போட்டியில் பங்கு பற்றிய கழகங்களுக்கு நினைவுக்கேடையங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .
 
இந்நிகழ்வின் போது வீரச்சாவடைந்த இம் மாவீரர்களின் சாதனைகளையும்,                                               அவர்கள் வீரச்சாவடைந்த தாக்குதல் நிகழ்வுகள் பற்றி மிகவும் விபரமான முறையில் எடுத்துரைக்கப்பட்டு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்படன , அத்தோடு இச்சுற்றுப்போட்டிக்கு  அனுசரணை வழங்கிய அனைத்து  வர்த்தக  நிறுவனங்களுக்கும்  இளம்றோயல்  விளையாட்டுக்கழகம் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டதோடு, மாலை 7 மணிக்கு பரிசளிப்பு  நிகழ்வுடன் இச்சுற்று போட்டி நிறைவு பெற்றது.

0 Responses to இளம்றோயல் விளையாட்டுக்கழகம் நடாத்திய லெப்.சீலன், வீரவேங்கை ஆனந்த் ,மூத்த உறுப்பினர் லெப்.செல்லக்கிளி அம்மான் ஆகியோரின் 30வது ஆண்டு நினைவுகள் சுமந்த உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com