மூன்று பத்தாண்டுகள் கடந்தும்
இன்னும் குருதிசிந்தும் நினைவுகளாக
நெருப்பின் சுவாலை சுட்டபடி
நெஞ்சின் ஆழமெங்கும் படிந்துள்ளது கறுப்புயூலை.
தமிழர் மனமெங்கும் துடைத்தெறிந்து
விடமுடியா பெருந்துயர்போல
தொடர்நதபடியே 83யூலை நினைவுகள்.
ஒற்றை ஆட்சிக்குள் ஒருமித்து வாழும்
தேசியக் கனவு அன்றைய நாட்களில்
தென்னிலங்கைத் தெருக்களில்
வீசியெறியப்பட்டு கலைந்து கிடந்தது காண்.
ஒன்றாகச் சேர்ந்து ஒருமித்தெழுந்து
வர்க்கப் புரட்சிசெய்யும்
பொதுவுடமைப் புரட்சியின்
வெட்டரிவாள் அவர்கள் கையிலும்
சுத்தியல் எமது கைகளிலுமாக
நிரந்தரமாக பிரிந்த நாட்கள் அவை.
சிங்களதேசக் கொடியில் நின்ற சிங்கம்
நீட்டிய வாளுடன் தமிழரின் உயிர்குடிக்க
தீவின் தெருக்கள்தோறும் உலாவந்த
நாட்கள் அவை.
காலகாலமாக சிங்களதேசத்தின்
வேருக்கு நீர்பாய்ச்சிய தமிழரின்
உடமைகள் எல்லாம் உருவப்பட்டு
ஆணிவேரும் அறுக்கப்பட்டுத்
துரத்தப்பட்ட நன்றிகொன்ற தினங்கள் அவை.
கொழும்பிலும் காலியிலும் இருந்து
தமிழரை ஏற்றிக்கொண்டு கப்பல்
காங்கேசன்துறை வந்து நின்றபோதே
இலங்கைத்தீவு ஒரு தேசம் என்ற வார்த்தை
பாக்குநீரிணைக்குள் அமிழ்ந்துபோயிற்று.
எரித்தும் அடித்தும் குதறப்பட்ட
தமிழர்களின் சடலங்களின்மீதும்
தென்னிலங்கை அகதிமுகாம்களில்
கட்டியிருந்த ஒற்றைஆடைகளுடன்
உணவுக்கு தட்டேந்தி வரிசையில் நின்ற
தமிழர்களின் உச்சந்தலைமீதும்
'போர் என்றால் போர்' என்ற
பேரினத்து ஜனாதிபதியின் பிரகடனம்தான்
சிங்களத்தின் ஒரே செய்தியாக
அழிக்கமுடியாது எழுதப்பட்டது அப்போது.
தென்னிலங்கைத் தெருவெங்கனும்
ஊழி நெருப்பெடுத்தாடி
தமிழர்உயிர் குடித்து ஆதிக்கபோதைஏறி
வெலிக்கடையின் மதில்கடந்து உள்நுழைந்து
உயிர் பறித்தும் கண்அகழ்ந்தும்
புத்தருக்கு படையலிட்டு
வேண்டுதலை நிறைவேற்றிற்று.
அன்றைக்கு புத்தன் நினைத்திருப்பான்
வெறும் சித்தார்தனாகவே இருந்திருக்கலாம் என.
அரசமரத்துக்கு கீழே இருந்த நாட்களுக்காக
நிச்சயம் ரத்தக்கண்ணீர் வடித்தும் இருப்பான்.
இன்றைக்கு முப்பதுஆண்டுகள்
ஓடியும் கடந்தும் உருண்டும்போனது-ஆயினும்
அந்த 83யூலை நாட்களில்
சிங்களதெருவெங்கும் கோடாலிகளுடன்
வெறியாட்டமாடிய தெருக்கோடி சண்டியரும்,
தென்னிலங்கை அலுவலகங்களில்
ஒன்றாய் உண்டுகழித்து ஒருமித்து வேலைசெய்த
'ரை' கட்டிய லொக்கு மாத்தையாக்களும்
ஒரு செய்தியையே தமிழருக்கு சொல்லினர்.
ஒரே செய்தியையே தமிழருக்கு சொல்லினர்.
இது உங்கள் தேசமல்ல
இது உங்கள் நாடு அல்ல,அல்ல
இன்றைக்கும் தொடரும் சிங்களத்தின்
செய்தியும் பிரகடனமும் இதுதான்
கடந்துபோகும் ஒவ்வொரு கறுப்புயூலையும்
இன்னும் இன்னுமாய் ஆழமாக அழுத்தமாக
சொல்லியபடியே போகின்றது.
சிறீலங்கா தமிழரின் தேசம் அல்ல.
தமிழரின் தாயகம் தமிழீழம் என்றே.
இந்தக் கறுப்புயூலையிலும்
இந்த முடிவே இன்னும் ஆழமாக.
எங்களுக்கென்றொரு தாயகம் நிச்சயம் வேண்டும்.
இன்னும் குருதிசிந்தும் நினைவுகளாக
நெருப்பின் சுவாலை சுட்டபடி
நெஞ்சின் ஆழமெங்கும் படிந்துள்ளது கறுப்புயூலை.
தமிழர் மனமெங்கும் துடைத்தெறிந்து
விடமுடியா பெருந்துயர்போல
தொடர்நதபடியே 83யூலை நினைவுகள்.
ஒற்றை ஆட்சிக்குள் ஒருமித்து வாழும்
தேசியக் கனவு அன்றைய நாட்களில்
தென்னிலங்கைத் தெருக்களில்
வீசியெறியப்பட்டு கலைந்து கிடந்தது காண்.
ஒன்றாகச் சேர்ந்து ஒருமித்தெழுந்து
வர்க்கப் புரட்சிசெய்யும்
பொதுவுடமைப் புரட்சியின்
வெட்டரிவாள் அவர்கள் கையிலும்
சுத்தியல் எமது கைகளிலுமாக
நிரந்தரமாக பிரிந்த நாட்கள் அவை.
சிங்களதேசக் கொடியில் நின்ற சிங்கம்
நீட்டிய வாளுடன் தமிழரின் உயிர்குடிக்க
தீவின் தெருக்கள்தோறும் உலாவந்த
நாட்கள் அவை.
காலகாலமாக சிங்களதேசத்தின்
வேருக்கு நீர்பாய்ச்சிய தமிழரின்
உடமைகள் எல்லாம் உருவப்பட்டு
ஆணிவேரும் அறுக்கப்பட்டுத்
துரத்தப்பட்ட நன்றிகொன்ற தினங்கள் அவை.
கொழும்பிலும் காலியிலும் இருந்து
தமிழரை ஏற்றிக்கொண்டு கப்பல்
காங்கேசன்துறை வந்து நின்றபோதே
இலங்கைத்தீவு ஒரு தேசம் என்ற வார்த்தை
பாக்குநீரிணைக்குள் அமிழ்ந்துபோயிற்று.
எரித்தும் அடித்தும் குதறப்பட்ட
தமிழர்களின் சடலங்களின்மீதும்
தென்னிலங்கை அகதிமுகாம்களில்
கட்டியிருந்த ஒற்றைஆடைகளுடன்
உணவுக்கு தட்டேந்தி வரிசையில் நின்ற
தமிழர்களின் உச்சந்தலைமீதும்
'போர் என்றால் போர்' என்ற
பேரினத்து ஜனாதிபதியின் பிரகடனம்தான்
சிங்களத்தின் ஒரே செய்தியாக
அழிக்கமுடியாது எழுதப்பட்டது அப்போது.
தென்னிலங்கைத் தெருவெங்கனும்
ஊழி நெருப்பெடுத்தாடி
தமிழர்உயிர் குடித்து ஆதிக்கபோதைஏறி
வெலிக்கடையின் மதில்கடந்து உள்நுழைந்து
உயிர் பறித்தும் கண்அகழ்ந்தும்
புத்தருக்கு படையலிட்டு
வேண்டுதலை நிறைவேற்றிற்று.
அன்றைக்கு புத்தன் நினைத்திருப்பான்
வெறும் சித்தார்தனாகவே இருந்திருக்கலாம் என.
அரசமரத்துக்கு கீழே இருந்த நாட்களுக்காக
நிச்சயம் ரத்தக்கண்ணீர் வடித்தும் இருப்பான்.
இன்றைக்கு முப்பதுஆண்டுகள்
ஓடியும் கடந்தும் உருண்டும்போனது-ஆயினும்
அந்த 83யூலை நாட்களில்
சிங்களதெருவெங்கும் கோடாலிகளுடன்
வெறியாட்டமாடிய தெருக்கோடி சண்டியரும்,
தென்னிலங்கை அலுவலகங்களில்
ஒன்றாய் உண்டுகழித்து ஒருமித்து வேலைசெய்த
'ரை' கட்டிய லொக்கு மாத்தையாக்களும்
ஒரு செய்தியையே தமிழருக்கு சொல்லினர்.
ஒரே செய்தியையே தமிழருக்கு சொல்லினர்.
இது உங்கள் தேசமல்ல
இது உங்கள் நாடு அல்ல,அல்ல
இன்றைக்கும் தொடரும் சிங்களத்தின்
செய்தியும் பிரகடனமும் இதுதான்
கடந்துபோகும் ஒவ்வொரு கறுப்புயூலையும்
இன்னும் இன்னுமாய் ஆழமாக அழுத்தமாக
சொல்லியபடியே போகின்றது.
சிறீலங்கா தமிழரின் தேசம் அல்ல.
தமிழரின் தாயகம் தமிழீழம் என்றே.
இந்தக் கறுப்புயூலையிலும்
இந்த முடிவே இன்னும் ஆழமாக.
எங்களுக்கென்றொரு தாயகம் நிச்சயம் வேண்டும்.



0 Responses to கறுப்புயூலையில் சாம்பலாகிப்போன ஒற்றைஆட்சி - ச.ச.முத்து