Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் உளவுத்துறை ரகசியங்களைக் கசிய விட்ட முன்னால் NSA உறுப்பினரான எட்வர்ட் ஸ்னோவ்டெனுக்கு சமீபத்தில் ரஷ்யாவில் தற்காலிக அகதி அந்தஸ்து வழங்கப் பட்டது.

ஸ்னோவ்டென் ரஷ்ய விமான நிலையத்தில் தடுத்து வைக்கப் பட ஆரம்பித்ததில் இருந்தே அமெரிக்க ரஷ்ய இராஜதந்திர உறவில் சிறு விரிசல் ஏற்பட்டிருந்தது.

ஆனால் தற்போது செப்டம்பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்திக்கவென மாஸ்கோவுக்குப் புறப்பட இருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பயணம் ஸ்னோவ்டென் விவகாரத்தால் ரத்து செய்யப் படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விடயம் குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து ஊடக தொடர்பாளர் ஜே.கார்னே தெரிவிக்கையில், ரஷ்யாவில் ஜி-20 நாடுகளின் மாநாடு முடிந்த பின் ரஷ்ய அதிபர் புட்டினுடன் சிரிய விவகாரம் குறித்து விவாதிக்க ஒபாமா திட்டமிட்டிருந்தார் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் அதிபர் ஒபாமா தனது விஜயத்தை ரத்து செய்தால் அது ரஷ்ய அதிபர் புட்டினின் முகத்தில் அறைந்தது போலாகி விடும் எனவும் இந்த உயர் மட்ட விஜயம் தடைப்பட்டால் அது ரஷ்யாவின் கௌரவத்தைப் பாதிக்கும் எனவும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் வெள்ளை மாளிகை இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஸ்னோவ்டெனைத் தமது நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் படி வற்புறுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. இதேவேளை இவ்விரு நாடுகளும் மத்திய கிழக்கில் நிகழும் முக்கிய பிரச்சினையான சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் ஆயுத மற்றும் ஏவுகணை பயன்பாடு குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும் கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஒபாமாவின் ரஷ்ய பயணம் ரத்து செய்யப் படலாம் - ஸ்னோவ்டென் விவகாரத்தின் விளைவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com