2012 பெப்ரவரி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் 17 வயதுடைய கறுப்பின
இளைஞரான ட்ராய்வொன் மார்ட்டின் சிறு தகராறினால் இனவெறி காரணமாக ஜோர்ஜ்
ஷிம்மெர்மேன் எனும் 29 வயது வெள்ளையரான வேட்ச் மேனால் கொல்லப்
பட்டிருந்தார்.
எனினும் கொலை நிகழ்ந்து 6 வாரங்கள் கழித்தே ஷிம்மெர்மேன் கைது செய்யப் பட்டது அமெரிக்க மக்களிடையே ஆத்திரத்தை மூட்டியது.
மேலும் இது தொடர்பாக ஃபுளோரிடாவில் இடம்பெற்ற வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப் பட்டது. இதன் போது ஷிம்மெர்மேன் தற்காப்புக்காகவே கறுப்பின இளைஞரை சுட நேர்ந்தது எனும் அடிப்படையில் விடுவிக்கப் பட்டார். இதையடுத்து அமெரிக்காவின் பல மாநிலங்களின் இத்தீர்ப்பை எதிர்த்தும் நீதி கோரியும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. இவ்விடயம் தொடர்பாக சமீபத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பின்வருமாறு தெரிவித்துள்ளார். அதாவது, 35 வருடங்களுக்கு முன்னர் நானும் ட்ராய்வொன் மார்ட்டினின் நிலையில் இருந்திருக்க வேண்டியவனே என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவில் மிகக் குறைவான கறுப்பின மனிதர்களே இனவெறி அழுத்தங்களில் சிக்காமல் இருந்து வருகின்றனர் எனவும் அவர் கூறினார். இதைவிட வரலாற்றுக் காலத்தில் இருந்தே ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் மிகத் தீவிரமாக இப்பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர் என்றும் இனவெறி வேற்றுமைக்கு எதிரான குற்றவியல் சட்டங்கள் கடுமையானதாக இல்லை என்றும் அவர் கூறினார். இதேவேளை குறித்த அசம்பாவிதத்தில் கொல்லப் பட்ட கறுப்பின இளைஞனுக்குப் பதிலாக வெள்ளை நிற இளைஞன் சிக்கியிருந்தால் இந்த வழக்கு நிகழ்த்தப் பட்டிருக்கும் நடைமுறையே வேறானதாக இருந்திருக்கும் எனவும் கொல்லப் பட்ட மார்ட்டின் எனது மகனுக்கு ஒப்பானவன் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தனது இளமைக் காலத்தில் ஷாப்பிங் உட்பட பல சந்தர்ப்பங்களில் இந்த இனவெறி அழுத்தத்துக்குத் தானும் ஆளாகியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் எமது குழந்தைகள் தமது தோல் நிறத்தின் தன்மையால் தாழ்த்தப் படும் சூழ்நிலையை எதிர்நோக்காது பாதுகாக்க வேண்டியது அனைத்து அமெரிக்க மக்களினதும் கடமையாகும் என்றும் ஒபாமா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to 35 வருடங்களுக்கு முன் நானும் ட்ராய்வொன் மார்ட்டின் ஆக இருந்திருக்க வேண்டியவனே! : பாரக் ஒபாமா