Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தருமபுரி இளவரசன் கொலையில் சந்தேகம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். காவல்துறையினர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், நடுநிலையோடு விசாரணை நடைபெறவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தருமபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசனின் மரணம் அதிர்ச்சியையும், பெரும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. இளவரசனின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நத்தம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் சென்னையில் சனிக்கிழமை அவரது பெற்றோர் தங்களது வழக்கறிஞர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இளவரசனின் தந்தை இளங்கோ கூறியதாவது, 

இளவரசனின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. ஆகவே இளவரசன் மரணம் குறித்த விசாரணை நேர்மையாகவும், சார்பின்றி நடுநிலையோடு நடைபெறுவதற்கு தமிழக அரசு வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு துறைக்கோ அல்லது சிறப்பு புலனாய்வு துறைக்கோ மாற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். 

தற்கொலை என்று தெரிவித்து இளவரசன் கொலை வழக்கை விரைவில் முடிப்பதற்கு காவல்துறை திட்டமிட்டுள்ளது. இளவரசன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல. அது முழுக்க முழுக்க கொலைதான் என்றார்.

0 Responses to இளவரசன் கொலையில் சந்தேகம்! தவறான தகவல்களை பரப்புகிறது காவல்துறை! பெற்றோர் குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com