Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய மத்திய அரசின் இலங்கை பற்றிய கொள்கைகள் தமிழர்களை அரசியல் அதிகார ரீதியில் பலவீனப்படுத்தியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தென் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக இந்திய மத்திய அரசு கடந்த காலங்களில் இலங்கைக்கான விட்டுக்கொடுப்புக்களை அதிகமாகவே செய்துள்ளது. இவை பற்றி எம்மால் முழுமையான திருப்தி அடைய முடியவில்லை. ஏனெனில், இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகளில் இலங்கை தனக்கு சாதகமான அம்சங்களை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தது. இதனால், இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக அண்மையில் நியமிக்கப்பட்ட வை.கே.சின்ஹாவை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறீமா- சாஸ்திரி ஒப்பந்தம் மலையக தமிழ் மக்களை பலவீனப்படுத்துவதாக அமைந்தது. அத்தோடு, இந்தியா கடந்த காலங்களில் இலங்கைக்கு வழங்கிய உதவிகள் மோதல்களில் வெற்றிகொண்டு பௌத்த நாடாக மாற்ற உதவியுள்ளது. தமிழ் மக்கள் இன்னமும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர். மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 Responses to இந்தியாவின் கொள்கைகள் இலங்கை தமிழர்களை பலவீனப்படுத்தியுள்ளது: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com