அவுஸ்திரேலியாவுக்கு சட்டத்துக்கு புறம்பான முறையில் கடல் மார்க்கமாக சென்ற ரொலர் படகு பழுதடைந்தமையால்
சில நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 73 அகதிக்
கோரிக்கையாளர்களும் காப்பாற்றப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை
கடற்படை அறிவித்துள்ளது.
காலியிலுள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த சட்டவிரோத அகதிக் கோரிக்கையாளர்கள் குற்றப்புலனாய்வு பொலிஸாரிடம் விசாரணைகளுக்கான கையளிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. காப்பாற்றப்பட்ட அகதிக் கோரிக்கையாளர்களில் வடக்கு- கிழக்கைச் சேர்ந்தவர்களே அதிகமுள்ளனர்.
இலங்கையின் மிரிஸ்ஸ பிரதேசத்திலிருந்து அகதிக் கோரிக்கையாளர்களை ஏற்றிய ரொலர் படகொன்று அவுஸ்திரேலியா நோக்கி கடந்த 17ஆம் திகதி முன்னர் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சில நாட்களில் இலங்கையிலிருந்து 270 கடல் மைல் தொலைவில் குறித்த படகின் இயந்திரம் பழுதடைந்துள்ளது.
இதனையடுத்து, கடந்த 23ஆம் திகதி படகிலிருந்தவர்களினால் இலங்கையின் கடற்படையினருக்கு ரேடர் கருவி மூலம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கடற்படையினர் இரண்டு நாட்களாக மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பின்னர் அகதிக் கோரிக்கையாளர்கள் 73 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

0 Responses to நடுக்கடலில் தத்தளித்த அகதிக் கோரிக்கையாளர்கள் காலி கரைக்கு அழைத்து வரப்பட்டனர்