எகிப்திய இராணுவத்தினர் முன்னாள் அதிபர் மொஹ்மட் மோர்ஸியை கடத்திவிட்டதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 3ம் திகதி எகிப்திய அதிபர் பதவியிலிருந்து கீழிறக்கப்பட்ட மோர்ஸி இராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் தனிமையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் பாதுகாப்பாகவே இருப்பதாக அறிவித்துள்ள இராணுவம் புதிய இடைக்கால நிர்வாக அரசை அங்கு நிறுவியுள்ளது.
இந்நிலையில், மோர்ஸியின் குடும்பத்தினர் இது குறித்து தெரிவிக்கையில், தமதுகுடும்பத்தலைவர் மோர்ஸிக்கு எதுவும் நடந்தால் அதற்கு இராணுவமே பொறுப்புக் கூறவேண்டும். அவரை பாதுகாக்க வேண்டியது இரணுவக் கடமையாகும். ஆனால் பதவியிலிருந்து கீழிறக்கப்பட்டது முதல் எம்முடன் எந்தவொரு தொடர்புமின்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனக்கூறியுள்ளனர்.
மோர்ஸியின் மகன் ஒசாமா கருத்து தெரிவிக்கையில், தந்தையை கடத்திவிட்டதாகவே நாம் உணர்கிறோம். சட்டவிரோதமான இச்செயலை எதிர்த்து அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட்டுள்ளோம். மோர்ஸியை நாடுவதற்கு எந்தவிதமான சட்டரீதியான கதவுகளையும் இராணுவ அரசு பூட்டிவைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மோர்ஸிக்கு சக்கரை வியாதி இருப்பதாகவும் அவரது ஈரல்கள் ஏற்கனவே பிரச்சினைக்குரியதாக இருப்பதாகவும் இதனால் மருத்துவர்கள் அவரை நாடுவதற்கு இராணுவத்திடம் அனுமதி கோரியிருப்பதாகவும், மருத்துவக் கூட்டமைப்பு தலைவர் அப்தெல் சலாம் கூறியுள்ளார். ஆனால் மோர்ஸிக்கு எந்தவொரு உடல்வியாதியும் இல்லை என மறுத்துள்ளார் மோர்ஸியின் மகன்.
இதேவேளை, மோர்ஸியை விடுவிக்க கோரியும் மறுபடியும் ஆட்சி அதிகாரத்தை வழங்கக் கோரியும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியினர் தொடர் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to எகிப்து முன்னாள் அதிபர் மோர்ஸியை இராணுவம் கடத்திவைத்துள்ளதாக குற்றச்சாட்டு