Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

உலகம் பூராவும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடன்களைக் கோரி வருகின்றது. மக்களோ ஏமாற்றத்துடன் இருக்கிறார்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் சோமவங்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளில் தவறுள்ளது. திறைசேரியில் பணமும் இல்லை. வெளிநாட்டு கடன்களை நம்பியே நாட்டை ஆள நினைக்கிறார்கள். தேவையற்ற விதங்களின் பணத்தை வீணடித்து கட்டடங்களைக் கட்டுகின்றனர். இவற்றால் பயனில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

கெக்கிராவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவங்ஸ அமரசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அம்பாந்தோட்டையில் விமான நிலையம் கட்டினார்கள் விமானங்கள் வருவதில்லை. துறைமுகம் கட்டினார்கள் கப்பல்கள் வருவதில்லை. அதுபோதாது என்று கிரிக்கட் மைதானமும் கட்டினார்கள் அங்கு கிரிக்கட்டும் ஆடப்படுவதில்லை. மக்களின் பணத்தை ஒட்டுமொத்தமாக வீணடித்துவிட்டு ஏமாற்றுக் கதைகளைப் பேசுகிறது இந்த அரசாங்கம் என்றார்.

13வது திருத்தம் பற்றி பேசிய அரசாங்கம் இன்றைக்கு அமைதி காக்கின்றது. அரசாங்கத்துக்குள்ளேயே பலருக்கு 13வது திருத்தத்தில் மாற்றங்களைச் செய்வதில் உடன்பாடில்லை. மஹிந்த அரசாங்கம் பிளவுபட்டு நிற்கிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to உலகம் பூராவும் கடன்களுக்காக மஹிந்த அரசாங்கம் கையேந்தி நிற்கிறது: சோமவங்ஸ அமரசிங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com