பொதுச்சுடர் ஏற்றல் ( தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திரு. யோசேப்
அவர்கள் ஏற்றிவைக்க அதனைத்தொடர்ந்து பிரெஞ்சுக் கொடியேற்றப்பட்டது.
லாக்கூர்னேவ் உதவி முதல்வர் திருமதி. மொறியல் தொந்த் அவர்கள் ஏற்றி வைக்க
தமிழீழத்தேசியக் கொடியை விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் திரு.சுதர்சன்
அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றல் நடைபெற்றது
ஈகைச்சுடரினை 03.10.1995 ல் நிலாவரையில் நடைபெற்ற மோதலில் வீரகாவியமான
கப்ரன் மகிழனின் அன்னை அவர்கள் ஏற்றிவைக்க மலர் வணக்கத்தை 19.03.1991ல்
சிலாவத்துறையில் நடைபெற்ற நேரடி மோதலில் வீரமரணத்தை தழுவிக்கொண்ட
வீரவேங்கை நளினி அவர்களின் சகோதரி செய்திருந்தார்.
அகவணக்கம் இடம் பெற்றது அதனைத்தொடர்ந்து இன்றைய மெய்வல்லுனர் போட்டியில் பங்கு கொண்டு சிறப்பித்த அனைத்து கழகங்களின் கொடியேற்றல் இடம் பெற்றன.
பாடும்மீன் விளையாட்டுக்கழகம்
இளந்தமிழ் விளையாட்டுக்கழகம்
தமிழர் விளையாட்டுக்கழகம் 95.
தமிழர் விளையாட்டுக்கழகம் 94
தமிழர் விளையாட்டுக்கழகம் 93
நல்லூர் ஸ்தான் விளையாட்டு கழகம்
வட்டுக்கோட்டை வி.கழகம் பங்கு பற்றிச் சிறப்பித்திருந்தன.
போட்டி ஆரம்ப நிகழ்வுகளாக
வெற்றிச்சுடர் ( ஒலிம்பிக் சுடர் ) பிரான்சு தமிழர் மெய்வல்லுநர் சங்கத் தலைவரும் தமிழர் விளையாட்டுத்துறை மெய்வல்லுநர் போட்டியின் முகாமையாளருமாகிய திரு. இ. இராஐலிங்கம் அவர்கள் தொடக்கி வைத்திருந்தார்.
2012ன் சிறந்த விளையாட்டு வீரர்களாக தெரிவு செய்யப்பட்ட செல்வன். இராகவன் பிரசாந்;, கிறிஸ்ரின் நிக்சன், செல்வி. அஐpத்தா கமலநாதன் ஆகியோர் இவ் வெற்றிச்சுடரினை பெற்று கொண்டு சென்று இப்போட்டியில் பங்குபற்றிய கழகங்களின் வீரர்கள் கைகளில் வழங்கினர். அதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கான உறுதிப்பிரமாணத்தையும், உத்தியோகத்தர்களுக்கான பிரமாணத்தையும் எடுத்துக்கொண்டனர். போட்டியை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மாவீரர் குடும்பத்தை சேர்ந்த அன்னை அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை ( முழவு வாத்தியக்குழு )யும், தொடர்ந்து கழகங்களின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை லாக்கூர்னோவ் உதவி முதல்வர் அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக திரு.ரூபன் தமிழ்ச்சோலை தலைமைப் பணியக பொறுப்பாளர் திரு. nஐயக்குமார் தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த உதவி முதல்வர் கருத்து தெரிவிக்கும் போது இன்றைய இளைஞர்கள் இவ்வாறு உற்சாகமாக போட்டிகளில் கலந்து கொள்வதை பார்க்கும் போது மிகுந்த உற்சாகத்தை தருவதாகவும் இவ்வாறு செய்யப்படும் விடயங்கள் ஒரு சமூகத்தின் ஒற்றுமையும், திறனையும், வெளிக்கெணரப்படுகின்றது என்றும். பிரான்சில் வாழும் தமிழ்மக்களின் செயற்பாடுகள் பற்றி பல நண்பர்கள் தனக்கு கூறியிருந்ததாகவும் அதனை நேரிடையாக பார்க்க கிடைத்துள்ளது என்றும் தங்கள் உதவி எப்போதும் இருக்கும் என்றும் தனது பொறுப்பு வகிக்கும் காலத்திற்குள் பிரான்சின் முதற்தர விளையாட்டரங்கில் விளையாடுவதற்கு தமிழர்களுக்கு ஒர் நளினை பெற்றுத்தருவதற்கு முயற்ச்சி செய்யப்போவதாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து தமிழ்ச்சோலை தலைமைபணியகத்தின் கீழ் உருவாக்கம் செய்யப்பட்ட பான்ட் வாத்தியம் ( முழவு வாத்திய அணி ) மிகவும் சிறப்பாக அணிவகுத்து செல்ல அவர்களைத் தொடர்ந்து அணிவகுத்து சென்றன.
இன்றைய நாளின் முதற் போட்டியாக 5000 மீற்றர் ஒட்டப்பந்தயமும் ஏனைய போட்டிகளும் இடம் பெற்றன.
அஞ்சல் ஒட்டம், சிறுவர்களுக்கான தடையோட்டம், பல தடகளப்போட்டிகள் நடைபெற்றன.
இடைவேளையை ஒட்டி இசையும் அசையும் நடைபெற்றன. 12 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்கள் இனிவரும் இனிவரும் காலங்கள் என்ற பாடலுக்கு நடனம் வழங்கி மக்களின் பலத்த பாராட்டுதல்களை கரகோசமூலம் பெற்றனர்.
உதைபந்தாட்ட 1ம் 2ம் இடத்திற்கான போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியின் நடுவர்கள், வீரர்கள் தமிழீழ தேசியக்கொடியுடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கான மரியாதைகளை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. பார்த்திபன், ஈழத்தமிழ் உதைபந்தாட்டசம்மேளன தலைவர் திரு. சங்கரராஐh அவர்கள் மற்றும் கரப்பந்தாட்ட சம்மேளன தலைவர் திரு. nஐகநாதன் அவர்கள், துடுபெடுத்தாட்ட சம்மேளன பொறுப்பாளர் திரு. ஆறுமுகதாஸ் மற்றும் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. சுதர்சன் உபகட்டமைப்பின் பொறுப்பாளர்களும் சென்று செய்திருந்தனர்.
உதைபந்தாட்ட போட்டியில் தமிழர் விளையாட்டுக்கழகம் 93 எதிர் நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம் மோதின. 3 – 2 என்கின்ற அடிப்படையில் தமிழர் விளையாட்டுக்கழகம் 93 வெற்றியீட்டியிருந்தது. 3 வது இடத்தை உதயசூரியன் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது.
சமநேரத்தில் கரப்பந்தாட்டப்போட்டிகளும் மைதானத்தின் அருகே நடை பெற்றிருந்து. கரப்பந்தாட்டம் ( செற்ரப் ) போட்டியில் 1 வது இடத்தை யாழ்டன் விளையாட்டுக்கழகமும் 2ம் இடத்தை நியூஸ்ரார் வி.க 3ம் இடத்தை விண்மீன்கள் வி.கழகம் கரப்பந்தாட்டம் (ஓவர்) 1ம் இடத்தை நியூஸ்ரார் எ வி.க, 2ம் இடத்தை நியூஸ்ரார் பி கழகம், 3ம் இடத்தை அன்பு ஐக்கியம் வி. கழகமும் பெற்றுக் கொண்டன.
துடுப்பெடுத்தாட்ட போட்டியில் 1 வது இடத்தை நண்பர்கள் வி. கழகமும், 2ம் இடத்தை அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகமும், 3 வது இடத்தை சுபன் வி. கழகமும் பெற்றுக் கொண்டன.
அனைத்து கழகங்களும் மாவீரர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தமது திறமைகளை மைதானத்தில் காட்டியிருந்தனர். புலம்பெயர்ந்து இன்றைய தொழிநுட்பத்திற்குள் கதிரைகளிலும், மடிக்கணனிகளுடனும் வாழ்வு சென்று கொண்டிருக்கும் இவ் நூற்றாண்டில் ஒவ்வொரு குழந்தைகளுக்குள் இருக்கும் உடற்திறன்களை கண்டு பிடித்து அவர்களுக்குரிய விளையாட்டுக்களை தெரிவு செய்து ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து அர்ப்பணிப்போடு ஒரு திடகாத்திரமான சமூக அக்கறையுடன் கொண்டு வரும் பணியில் அர்ப்பணிப்போடு ஒவ்வொரு கழகங்களும் செயற்பட்டிருந்தனர். தாயகத்தின் இன்றைய சூழ்நிலையும், இதுதான் இனிதொடரப்போகும் என்ற மனநிலையில் தனிப்பட்டவர்கள் தமது நலனுக்காகவும் பெயர் விளம்பரத்திற்காகவும், போட்டிகளை சிலர் நடாத்த முற்பட்டிருக்கும் இவ்வேளை நடந்த முடிந்த, நடைபெறப்போகின்ற தேசம் நோக்கிய செயற்பாடுகளும், மக்களின் வருங்கால சந்ததியின் நிலைப்பாட்டை புரிந்திருப்பார்கள்.
இன்றைய போட்டிகளை பார்த்து ரசிக்க தாய்த்தமிழ்நாட்டில் இருந்து தமிழ்ப் பேராசியர் திரு. அறிவரசன் ஐயா அவர்கள் வருகை தந்ததோடு வீரர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி மதிப்பளித்திருந்தார்.
2013 மாவீரர் நினைவு சுமந்த போட்டியின் சுற்றுக்கிண்ணத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழர் விளையாட்டுக்கழகமும், இந்தத்தடவையாவது தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு நல்லூர்ஸ்தான் வி. கழக வீரர்களும் போட்டி ஆரம்பநாட்களில் இருந்து பலத்த போட்டிகள் சந்தித்திருந்தன. இறுதியில் 09 புள்ளிகள் வித்தியாசத்தில் நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம் 2013 வெற்றியை தனதாக்கி கொண்டது. வெற்றிக்கிண்ணத்தை ஆனந்தக்கண்ணீர்களுடன் கழகப் பொறுப்பாளர்கள் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் திரு. சுதர்சன் அவர்களிடம் பெற்றுச்சென்றனர்.
காலநிலை மாற்றத்தால் கடந்த காலத்தை விட கடுமையான வெயில் 39 பாகை அணல் வெட்கைக்கு மத்தியில் போட்டிகள் நடைபெற்றன. மக்களுக்கான உணவுகளையும், குளிர்பானங்களையும் தமிழீழ உணவகத்தினர் மலிவு விலைகளில் வழங்கினர்.
இப்போட்டிகளில் தாயகத்தில் விளையாட்டுத்துறையில் கடமையாற்றியவர்கள், விளையாட்டுத்துறை ஆசிரியர்கள், வீரர்கள், அனுபவசாலிகள் தன்னலம் கருதாது தமது வாழ்வுக்கும், தமது உயர்வுக்கும், தலைநிமிர்வுக்கும் காரணமான மாவீரர்கள் நினைவாக நடாத்தப்பட்ட இவ் மெய்வல்லுனர் மற்றும் உதைபந்தாட்ட, கரப்பந்தாட், துடுப்பெடுத்தாட்ட போட்டிகளில் எந்தவித பிரதிஉபகாரமும் பாராது சிறப்பாகவும், நீதியாகவும், கடைமையுணர்வுடன் பணியாற்றியிருந்தனர்.
இவ் அத்தனை உள்ளங்களையும், மாவீரர்போட்டியில் போட்டியாளர்களை பங்கு கொள்ள வைத்த கழகங்களுக்கும் அன்போடும், நன்றியோடும் தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு கரம் பற்றிக் கொள்கின்றது எனத் தெரிவித்ததோடு கழகங்களின் கொடியிறக்கலுடன் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் உரைக்கப்பட்டு போட்டிகள் நிறைவு பெற்றது.

0 Responses to அவுஸ்திரேலியா சிட்னியில் கறுப்பு யூலையும், கரும்புலி நினைவு நாளும்