Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சட்டத்துக்கு புறம்பாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் யாருக்கும் எதிர்காலத்தில் புகலிடம் வழங்கப்பட மாட்டது என்று அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் அறிவித்துள்ளார்.

இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தொடர்ச்சியாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் ஏதிலி (அகதி) கோரிக்கையார்கள் செல்கின்றனர். இப்படி செல்லும் படகுகள், அவுஸ்திரேலிய கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி தொடர்சியாக மரணங்களும் சம்பவித்து வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களுக்குள் 5 பேர் அளவில் உயிரிழந்துள்ளதுடன், 15 பேருக்கும் அதிகமானோர் காணாமல் போன சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களிடம் பேசிய அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின்  ரட், படகு மூலம் வருகை தரும் அனைத்து ஏதிலி கோரிக்கையாளர்களும் பப்புவா நியுகினிய தீவுகளுக்கு அனுப்பப்படுவார்கள். அதன் பின்னர் அவர்களின் ஏதிலி கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சொந்த நாடுகளுக்கு அல்லது ஏதாவது ஒரு மூன்றாவது நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to சட்டவிரோத அகதி அந்தஸ்து கோரிக்கையாளர்களுக்கு இனி புகலிடம் இல்லை : ஆஸ்திரேலியா பகிரங்க அறிவுப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com