தருமபுரி இளவரசன் மரணம் குறித்த சர்ச்சையை விசாரித்து,
அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி சிங்காரவேலு தலைமையில் தனி நபர் கமிஷன்
நியமிக்கப்பட்டுள்ளது. இந்த தனி நபர் கமிஷனின் அறிக்கை வரும் ஆகஸ்ட் மாதம்
தொடங்கும் என்றும் தெரிய வருகிறது.
தருமபுரியில் காதல் செய்து கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் இளவரசன்-திவ்யா தம்பதியினர். இந்த திருமணத்தால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் திவ்யாவின் தந்தை. தந்தை இறந்து 7 மாதங்கள் கழித்து, தாயைப் பார்க்க வந்த திவ்யா, தாயுடனே தங்கிவிட விருப்பம் என்றும், இளவரசனுடன் வாழ விருப்பம் இல்லை என்றும் கூறிவிட்டார். இதனால் மனமுடைந்த இளவரசன் மறுநாள் தருமபுரி ரயில் தண்டவாளத்தின் அருகில் பிணமாக கிடந்ததால், இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
அனால், இளவரசன் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவனது சாவில் மர்மம் உள்ளது என்று, இளவரசன் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, இளவரசன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு, இளவரசன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தனர்.
சோதனை அறிக்கையில், இளவரசன பிறரால் துன்புற்று இறந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என்றும், ரயிலில் அடிபட்டு இறந்து இருக்கிறார் என்பதுதான் உணமை என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மறு பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனிடையே இளவரசன் மரணம் தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி, சிங்காரவேலு தலைமையில், ஒரு நபர் நீதி விசாரணை கமிஷன் அமைத்தது, மாவட்ட குற்றப்பிரிவு மையம். இந்த கமிஷன் தமது விசாரணையை ஆகஸ்ட் மாதத்தில் துவக்க இருப்பதாகவும் தகவல் வெளியகியுள்ளது.

0 Responses to தருமபுரி இளவரசன் மரணம் குறித்த சர்ச்சை:தனி நபர் கமிஷன் விசாரணை ஆகஸ்டில் தொடக்கம்!