வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் ஏதும் இல்லை.
ஆகவே, முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டியில் நான் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணக் கிளை மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளதாக நேற்று திங்கட்கிழமை அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் வடக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே அதில் போட்டியிடுவதா, இல்லையா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்கும். அதன் பின்னரே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது பற்றிய பேச்சுக்கே வர முடியும். அதற்கு முன்னர் எதையும் அறிவிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் : சுரேஸ் பிரேமச்சந்திரன்