Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இந்திய வெளியுறவுத் துறை செயலராக சுஜாதா சிங் என்கிற பெண் செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் பெயர் சஞ்சய் சிங் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்திய வெளியுறவுத் துறை செயலராக இருந்த ரஞ்சன் மத்தாய், இம்மாதம் 31ம் திகதியுடன் ஓய்வு பெறுகிறார். இதை அடுத்து புதிய வெளியுறவுத் துறை செயலராக சுஜாதா சிங், நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலகம், மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

தற்போது 59 வயதாகும் சுஜாதா சிங், 1976ம் ஆண்டின் ஐ எப் எல் கேடர் ஆவார். தற்போது ஜெர்மனிக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கடந்த ஏப்ரல் மாதம்தான ஓய்வு பெற்றார்  என்பது குறிப்பிடத் தக்கது.

கூடிய விரைவில் இவரது பதவி ஏற்பு நிகழ்ச்சி இருக்கும் என்றும், இவருக்கு பதவி பிரமாணத்தை, பிரதமர் மன்மோகன் சிங் செய்து வைப்பார் என்றும் தெரிய வருகிறது. ஜெர்மனிக்கான இந்திய தூதருக்கு ஏற்ற ஆளைத் தேர்வு செய்தவுடன், இவர் வெளியுறவு துறை செயலர் பதவியை ஏற்றுக் கொள்வார் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக சுஜாதாசிங் நியமனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com