Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தை வாக்குகளாக்கும் பணியில் பாஜகவினர் ஈடுபட வேண்டும் என்று சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

மேற்கு டெல்லியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற  எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், "பெருகி வரும் லஞ்ச ஊழல், அத்தியாவசிய  பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றைக் கண்டு மக்கள் கொதித்துப் போய்  உள்ளனர். இன்று பொதுத் தேர்தல்  நடந்தாலும் எங்கள் ஓட்டுக்களை எடுத்துக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியைத் தூக்கி எறியுங்கள் என்று கூறும் அளவுக்கு மக்கள் ஆவேசத்தில் இருக்கிறார்கள்.

மக்களின் இந்த கோபத்தை  சாதகமாக்கிக் கொண்டு அதையே காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்களாக மாற்றும் முயற்சியில் நாம் பணியாற்ற வேண்டும். வெறும் கோஷங்கள் எழுப்புவது மட்டுமே, தேர்தல் பணியாகிவிடாது. தங்களது பகுதி மக்களின் குறைகளை ஒவ்வொரு பாஜக தொண்டரும் சரியாக புரிந்து கொண்டு அவற்றை  தலைமையின் கவனத்துக்கு கொண்டு  வந்து தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இது போன்ற பணிகள் மூலம் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தை பாஜகவுக்கு ஆதரவான ஓட்டுக்களாக  மாற்ற முயற்சிக்க வேண்டும்." என்று கூறியுள்ளார். 

0 Responses to காங்கிரசுக்கு எதிரான கோபத்தை வாக்குகளாக மாற்றுங்கள் : சுஷ்மா சுவராஜ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com