Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பீகார் அரசு பள்ளிகளில் மத்திய உணவுத் திட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக, சத்துணவு திட்ட பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பீகார் மாநில அரசுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் பீகார் மாநிலம் பாட்னாவில், சத்துணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பலியான சோக சம்பவம் நிகழ்ந்தது. தடயவியல் பரிசோதனையில், குழந்தைகள் சாப்பிட்ட உணவுப் பொருட்களில் பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் கலந்து இருந்ததால்தான், உணவு விஷமாக மாறிப்போனது என்று  செய்யப்பட்டது. இதை அடுத்து, தலைமறைவான பள்ளியின் முதல்வர் மீனா தேவி நேற்று கைது  செய்யப்பட்டுள்ளார்.

 இந்நிலையில்,மத்திய உணவுத் திட்டத்தை நெறிமுறைப் படுத்த வேண்டும், அல்லது தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று, பீகார் மாநிலத்தின் அனைத்து துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவர் ஷர்மா அறிவித்துள்ளார். அதுவரை மாநிலத்தில் உள்ள அனைத்து, துவக்கப பள்ளிகளிலும் மதிய உணவு திட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதனால், பீகார் அரசுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள சுமார் 72 ஆயிரம் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பது என்பது, இயலாத காரியம் என்று பீகார் அரசு திணறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைப் புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு : பீகார் அரசுக்கு மேலும் பின்னடைவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com