Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ்ட் போட்டியில் தமிழக வீராங்கணை ஜெனிதா ஆண்டோ சாம்பியன் பட்டம் வென்று பெருமை சேர்த்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்காக உலக செஸ் சம்மேளனத்தின் சார்பில் 13வது மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி செக்.குடியரசின் வெல்கி லோஸினி நகரில் நடைபெற்றது.
இதில் 15 நாடுகளை சேர்ந்த 49 வீராங்கணைகள் பங்கேற்றனர். இவர்களில் ஜெனிதாவை தவிர ஏனைய அனைவரும் சர்வதேச ரேட்டிங்கில் உள்ள வீராங்கணைகள் ஆவார்கள். ஜெனிதா மட்டுமே ஃபிடே ரேட்டிங்கிலிருந்த வீராங்கணை ஆவார். மொத்தம் 9 சுற்றுக்களைக் கொண்ட இப்போட்டியில் ஜெனிதா 3 வெற்றி, 3 சமநிலை, 3 தோல்விகளுடன் மொத்தம் 4.5 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் ஆனார்.

இரண்டாம் இடத்தை ரஷ்ய வீராங்கணை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் மகளீர் சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தையும் ஜெனிதா பெற்றுள்ளார். இதனால் உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முன்னணி போட்டிகளைத் தவிர மற்ற சர்வதேச போட்டியில் பங்கேற்க அவர் நேரடித் தகுதி பெற்றுள்ளார்.

0 Responses to மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய வீராங்கணை வெற்றி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com