Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் இலங்கைத் தமிழர் ஒருவரின் பிரபலமான கடையினை இரண்டு முகமூடியணிந்த திருடர்கள் பெற்றோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இலங்கையைச் சேர்ந்த 48 வயதான ஜுட் ஜீவன் என்பவர் புலம்பெயர்ந்து பிரித்தானியாவிலுள்ள லிவர்பூல், பிரயோரி வீதியில் அமைந்துள்ள பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜுன் 8ம் திகதி 9 மணியளவில் தம்மை உருமறைப்புச் செய்துகொண்டு கடைக்குள் நுழைந்த இருவர், திருட முற்பட்டதுடன் இனவெறிச் சொற்களை பிரயோகித்து கடும் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் வெளியேற்ற முயன்ற ஜுட் மீது தீ மூட்ட முயன்றுள்ளனர். இதன் போது பதட்டமைந்த அவர் நிலை தடுமாறி எரிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட பகுதியில் விழுந்துள்ளார்.

பலத்த எரி காயங்களுக்குள்ளான ஜுட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சில வாரங்கள் அங்கே தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் உயிராபத்தில் இருந்து தப்பியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஜுட் ஜிவன், பொலிஸாரிடம் விபரிக்கையில், நான் தற்பொழுது உயிர்பிழைத்திருப்பது பேர் அதிசயமே. இவ்விரு சந்தேக நபர்களும் முகமூடி அணிந்திருந்தனர். நான் இவ்விருவரும் கிண்டல் செய்வதாகவே எண்ணினேன். ஆயினும் திடீரென பெற்றோல் ஊற்றி தீயிட்டனர்.
அயலவர்களின் உதவியுடன் தற்பொழுது உயிர் பிழைத்துள்ளேன் என பொலிஸாரிடம் தெரிவித்தார்.


0 Responses to லண்டனில் இலங்கைத் தமிழரின் கடை தீக்கிரை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com