வழக்கறிஞர்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள புதிதாக இணையதளம்
துவக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
பி.சதாசிவம் துவக்கி வைத்தார்.
இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் தலைவர் செல்வம் வெளிட்டுள்ள அறிக்கையில், 'பார்கவுன்சில் சார்பில் துவக்கப்பட்டுள்ள இந்த இணைய தளத்தின் மூலம், வழக்கறிஞர் ஒருவரின் பிறந்த திகதி, வழக்கறிஞராக அவர் தன்னை பதிவு செய்து கொண்ட திகதி, தற்போது அவர் வழக்கறிஞராக பணியாற்றுகிறாரா, நலத்திட்டங்களில் சேர்ந்துள்ளாரா போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
பொது மக்களும் தங்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். போலி வழக்கறிஞர்களிடம் வழக்கை கொடுத்து, ஏமாறாமல் இருக்க முடியும். வழக்கறிஞர்களும், தங்களைப் பற்றிய விவரங்களை இந்த இணைய தளத்திற்கு புகைப்படத்துடன் அனுப்பலாம்.' என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்த இணைய தளத்தை உச்ச நீதிமனற தலைமை நீதிபதி பி.சதாசிவம் துவக்கி வைத்து பேசுகையில், தங்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்களின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டியது பொதுமக்களின் உரிமை. இதைக் கருத்தில் கொண்டே, இந்த இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
குறித்த இணையத் தளத்தின் முகவரி...

0 Responses to வழக்கறிஞர்கள் விவரங்கள் பற்றித் தெரிந்து கொள்ள புதிய இணையதளம்!:தலைமை நீதிபதி துவக்கி வைத்தார்!