Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராகுல் காந்தி, நரேந்திர மோடி இருவருமே பிரதமர் பதவிகளுக்கு பொருத்தமானவர்கள் இல்லை என காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

2014 நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும், பாஜக சார்பில் நரேந்திர மோடியும் பிரதமர் பதவிக்கு வேட்பாளர்களாக நிறுத்தப்படலாம் என் ஊகங்கள் எழுந்தவாறு உள்ளன.

இந்நிலையில் இருவருமே பிரதமர் பதவிக்கு மிகப்பொருத்தமான தெரிவு இல்லை எனவும், அவர்களை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

கடந்த 10 வருடங்களாக குஜராத்தின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி ஊழலை முற்றாக ஒழிக்க நடைமுறைப்படுத்த வேண்டிய லோக் ஆயுக்தா குழுவை இழுத்தடித்து வந்தார். ராகுல் காந்தியும் ஊழலை ஒழிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரியவில்லை. ஏசி அறையிலிருந்து கொண்டு வறுமையை ஒழிக்க முடியாது. ரூ.33 ஐக் கொண்டு ஒரு மாத உணவை வழங்க முடியாது.

டெல்லியில் எதிர்வரும் டிசம்பர் மாதம் மீண்டும் ஜன் லோக்பால் மசோதாவை கொண்டுவருவது தொடர்பில் போராட்டம் தொடரும். இதற்காக எனது ஜங்கிராந்தி மோர்ச்சா அமைப்பில் 6 கோடி தொண்டர்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர் என ஹசாரே தெரிவித்தார்.

முன்னதாக நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார வல்லுனர் அமர்தியா சென்னும், மோடி பிரதமராவதற்கு தகுதியானவர் அல்ல என கருத்து தெரிவித்திருந்தார்.

0 Responses to ராகுல் காந்தி, நரேந்திர மோடி இருவருமே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்கள் அல்ல : அன்னா ஹசாரே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com