மோதல் காலங்களில் காணாமற்போனோர் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை
அமைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு
பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் 30 ஆண்டுகளாக தொடர்ந்த மோதல்கள் மற்றும் குழப்பங்களின் போது காணாமற்போனவர்களை கண்டு பிடிப்பதற்காகவும்- அவர்கள் குறித்து இறுதி நிலைப்பாட்டை வெளியிடுவதற்குமாகவே குழுவொன்றை நியமித்து விசாரிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவை அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த காலங்களில் காணாமற்போனவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். அது தொடர்பாக சரியான கணக்கு இதுவரை எடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையிலேயே ஜனாதிபதி புதிய குழுவை அமைக்க பணித்துள்ளமை முக்கியத்துவத்துடன் நோக்கப்படுகிறது.

0 Responses to காணாமற்போனோர் குறித்து விசாரிக்க குழு அமைக்க ஜனாதிபதி மஹிந்த பணிப்பு