Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

20.07.2013. அன்று றுநவெறழசவாஎடைடந இல் அமைந்துள்ள மண்டபத்தில் இன் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தமிழீழ, அவுஸ்திரேலியா தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் அகவணக்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மக்கள் அணைவரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அடுத்ததாக இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் அஐpத்தன் இளங்கோவன் அவர்கள் கரும்புலிகளின் தியாகத்தையும், அவர்களின் சாதனைகள் பற்றியும் இளையோர்களை உள்வாங்கக்கூடிய வகையில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
 
அவரை தொடர்ந்து திரு மயில்வாகனம் தனபாலசிங்கம் அவர்கள் கறுப்பு யூலை மற்றும் கரும்புலிகளின் நினைவுகளை சுமந்து சிறிய உரையாற்றினார்.

அடுத்ததாக ஆனா பரராஐசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலை நோக்கிய போராட்டத்தின் ஆரம்பம் முதல் இன்றுவரை தொடரும் அரசியல் செயற்பாடுகளை மிகவும் விரிவாக இளம் சமூகத்தினருக்கு விளங்கக்கூடிய வகையில் எடுத்துக்கூறினார். தொடர்ந்து இன்றய அரசியல் வேலைகளில் ஈடுபடுகின்ற இளையோர்களின் செயற்பாடுகள் மற்றும் செயற் திட்டங்கள் பற்றி திரு.சேரன் சிறிபாலன், திரு.கார்த்திபன் அருள் அவர்களும் விளக்கமாக விரிவுரையாற்றினார்கள்.

கொடியிறக்கலுடனும், உறுதிமொழி எடுக்கப்பட்டு இன் நிகழ்வு நிறைவு பெற்றது.
 
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சிட்னி அவுஸ்திரேலியா.

0 Responses to அவுஸ்திரேலியா சிட்னியில் கறுப்பு யூலையும், கரும்புலி நினைவு நாளும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com