அராலி இராணுவ முகாமில் மேஜர் தர இராணுவ அதிகாரி ஒருவர் படுக்கையில் இருந்து
நேற்றுக் காலை சடலமாக மீட்கப்படடுள்ளார். குறித்த முகாமின்
பொறுப்பதிகாரியும் அம்பன் பொல, மாம்பிட்டி கலட்ட வீதியைச் சேர்ந்தவருமான
மேஜர் ஹேரத் முதியான்சலாகே சமந்த ஹேரத் (வயது 38) என்பவரே இவ்வாறு சடலமாக
மீட்கப்பட்டவராவார்.
இவர் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் முகாமுக்குள் படுக்கைக்குச்
சென்றுள்ளார். நேற்றுக்காலை சிப்பாய் ஒருவர், மேஜருக்கு தேநீர் எடுத்துச்
சென்றுள்ளார். அங்கு அவர் பேச்சுமூச்சின்றிக் கிடந்ததை கண்ணுற்ற குறித்த
சிப்பாய் ஏனைய படைவீரர்களுக்கு இதுபற்றி அறிவித்தார். உடனடியாக அவர்
சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அங்கு மேற்கொள்ளப்பட்ட
பரிசோதனையின் போது அவர் உயிரிழந்துவிட்டார் என்பது தெரியவந்தது.
அதனையடுத்து சம்பவம் தொடர்பில் இலங்கைப்பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. வைத்தியசாலைக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். மேலதிக இழைய பரிசோதனைகளுக்காக உடற்கூறுகள் சில கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

0 Responses to இராணுவ மேஜர் அராலியில் மர்மச்சாவு!