கருப்பு பணத்தை உருவாக்குவோர் தண்டிக்கப்படுவார்கள் என்று, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும் கருப்பு பணத்தை பதுக்க தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சி ஏ மாணவர்கள் தேசிய மாநாட்டில் நரேந்திர மோடி பேசியதாவது, "கருப்பு பணத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. சி ஏ படிக்காதவர்கள் கருப்பு பணம் உருவாவதைத் தடுக்க முடியும். அதன் மூலம் நாட்டின் சமூக கட்டமைப்பை மேம்படுத்துவதில் அவர்கள் பெரிய பங்காற்ற முடியும்.
சி ஏ படித்தவர்கள் தாக்கல் செய்யும் தணிக்கை அறிக்கை வெறும் அறிக்கைகள் மட்டும் அல்ல, மக்களின் நம்பிக்கை மற்றும் அவர்களது பொருளாதார ரீதியான முடிவுகளை அடிபடையகக் கொண்டது. தணிக்கை அறிக்கையின் அடிப்படையில்தான் சாதாரண மக்கள் தங்களது பொருளாதார ரீதியான முடிவுகளை எடுக்கின்றனர்.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால், இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. பணம் கருப்பு பணம் அல்ல, ஆனால் கருப்பு மனம் படைத்தோரிடம் இருந்துதான் கருப்பு பணம் உருவாகிறது. கருப்பு பணத்தை உருவாக்குவோர் தண்டிக்கப்படுவார்கள். நாட்டில் கருப்பு பணம் பெருக பின்னணியில் இருப்பவர்கள் அனைவரையும் தண்டிக்கும் சந்தர்ப்பம் விரைவில் வரும்." இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
0 Responses to கருப்பு பணத்தை பதுக்க தூண்டுவோர் மீது நடவடிக்கை!