தற்போது கொய்யாபழம் சீசன் தொடங்கிவிட்டது, சென்னைக்கு அறுத்தால் செக்க செவேல் என்கிற கலரில் பளிச்சென்று நம்மை ஈர்க்கும், பெங்களூர் கொய்யாவின் வரத்தும் தொடங்கி விட்டது.
விலை மலிவாக கிடைக்கும் கொய்யாவில் ஆப்பிளில் உள்ள சத்துக்களை விட மிக அதிகமான சத்துக்கள் உள்ளனவாம். இது மருத்துவர்கள் கூறும் தகவல்!
நன்றாக பழுத்த கொய்யாபழத்துடன், மிளகு, எலுமிச்சம் பழச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ளபித்தம் நீங்கி, சோர்வும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுமாம். கொய்யாவுடன் சப்போட்டா பழம், தேன் கலந்து சாப்பிட்டால், நன்றாக ஜீரணம் ஆவதோடு மலசிக்களும் தீரும், வயிற்றுப் புண்ணும் குணமாகுமாம். அதோடு, வயிற்றுப்போக்கு, மூட்டு வலி, அரிப்பு, மூல நோய், தொண்டைப்புண் போன்ற நோய்களும் குணமாகுமாம்.
கொய்யா பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது என்றும், காரணம் கொய்யாவில் அமிலத்தன்மை அதிகம் இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, பல தொந்திரவுகள், வாயிற்று உபாதைகள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
கொய்யாவில் ஆப்பிளை விட கூடுதலாக சத்துக்கள் உள்ளன என்றும், மலிவு விலையில் கிடைக்கும் கொய்யாவில் ஆப்பிளை விட கூடுதலான வலிமை கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
0 Responses to ஆப்பிளைவிட கொய்யா பழத்தில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளதாமே