வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கிற ஏழைகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவதாக திட்டக் கமிஷன் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பக்கம் விலைவாசி உயர்வு, பண வீக்கம், பொருளாதார மந்தம், உள்நாட்டு உயற்பத்தி சரிவு, என பல்வேறு பின்னடைவான அம்சங்கள் நமது நாட்டை போட்டுத் தாக்கினாலும், வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கிற ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்கிற புள்ளி விவரக் கணக்கு சற்றே ஆறுதல் தருவதாக இருக்கிறது.
உணவு, கல்வி, சுகாதாரம் போன்ற முக்கியமான விஷயங்களுக்கு ஒரு குடும்பத்தினர் மாதம் தோறும் செலவு செய்கிற தொகையின் அடிப்படையில், 2011-12ம் ஆண்டில் சுரேஷ் டெண்டுல்கர் குழு, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிற மக்களை நிர்ணயித்து, அந்த வகையில், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப் புறங்களில் தினமும் ஆய்வு நடத்தியது. அதன் படி, கிராமப்புறங்களில் தினமும் ஒரு நபருக்கு 27 ரூபாய் 20 பைசா வீதம் மாதத்துக்கு 816 ரூபாய் வரையும்,நகர்ப்புறங்களில் நாளைக்கு 33 ரூபாய் 33 பைசா என்கிற விகிதத்தில் மாதத்துக்கு 1000 ரூபாய் செலவில் ஒருவர் வாழ முடியும் என்றால், அவர்கள் ஏழைகள் அல்ல.
குடும்பம் என்று பார்த்தால், கிராமப் புறங்களில் 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் மாதம் 4 ஆயிரத்து 80 ரூபாய் செலவிலும்,நகர்ப்புறங்களில் ரூபாய் 5 ஆயிரத்திலும் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்றால் அவர்கள் ஏழைகள் அல்ல.
இந்த அடிப்படையில், 2004-05ம் ஆண்டில், இந்த செலவு கூட செய்ய முடியாத வகையில் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கிற ஏழைகளின் எண்ணிக்கை 37.2 சதவிகிதமாக் இருந்தது, இப்போது 21.9 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதாவது இந்தியாவில் 26 கோடியே 93 லட்சம் பேர்கள்தான் ஏழைகள் என்பது திட்ட கமிஷன் தரும் புள்ளிவிவரம் ஆகும்.
வறுமைக் கோட்டுக்கு கீழ வாழும் ஏழைகளின் எண்ணிக்கை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் என்பது குறிப்பிடத் தக்கது.அதோடு டெண்டுல்கர் குழுவின் வழிமுறையை மறு ஆய்வு செய்வதற்கு பிரதமரின் அலுவலக பொருளாதார ஆலோசனை குழுத் தலைவர் ரங்கராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும்,இந்த குழு தமது ஆய்வறிக்கையை அடுத்த வருடம் சமர்ப்பிக்கும் என்றும் தெரிகிறது.

0 Responses to வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கிற ஏழைகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைகிறது!:திட்டக் கமிஷன் புள்ளிவிவரம்!