Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இன்று புதன்கிழமை இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பையேற்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள தயாசிறி ஜயசேகர, எதிர்வரும் செம்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களும், முக்கியஸ்தர்களும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே, தயாசிறி ஜயசேகரவின் இணைவும் பார்க்கப்படுகிறது.

சில நாட்களாக அரசியலரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணையப்போவதாக பேச்சுக்கள் எழுந்திருந்தன. ஆனாலும், அப்படியான சந்தர்ப்பங்கள் எதுவும் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி மறுத்திருந்தது. இந்த நிலையிலேயே அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தயாசிறி ஜயசேகர அறிவித்திருக்கின்றார்.

0 Responses to ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணைவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com