தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கட்சிகளிற்கிடையேயான பங்கீடு முடிவுக்கு
வந்துவிட்ட போதும் கட்சிகள் தமக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதினில்
தொடர்ந்தும் இழுபறிப்பட்டவண்ணமுள்ளன.
அவ்வகையினில் தனக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனம்
வழங்கப்படவில்லையென்பதன் பின்னணியினில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்
பொ.கனகசபாபதி தமது அங்கத்துவம் மற்றும் தற்போது வகித்து வரும் பிரதே சபை
அங்கத்தவர் பதவி என்பவற்றை இன்று ராஜினாமாச்செய்துள்ளார்.மற்றொரு
அங்கத்தவரான குலநாயகமும் ராஜினாமாச்செய்ய முடிவு செய்திருப்பதாக
கூறப்படுகின்றது.மாவை சேனாதிராசாவின் வலது இடது கரங்களான இத்தரப்புக்களது
ராஜினாமாவை மாவை ஏற்றுக்கொள்வாராவென்பது தெளிவாகவில்லை.
இதனிடையே தமிழரசு கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவிற்கான தலைவரான பேராசிரியர் சிற்றம்பலம் சீ.வி,கே சிவஞானம் போன்றவர்களையும் பட்டியலிலிருந்து விலக்க ஆலோசனையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.இதனிடையே முன்னாள் ஊடகவியலாளரான வித்தியாதரனிற்கு ஆசனத்தை ஒதுக்க கட்சியின் தலைவர் சம்பந்தன் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை கூட்டமைப்பின் வேட்பு மனுக்களை வடக்கின் ஜந்து மாவட்டங்களினிலும் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவள்ளதாகவும் முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரனும் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இரா.சம்பந்தன் சில நாட்களிற்கு வடக்கில் தங்கி நின்று பிரச்சாரங்களினில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

0 Responses to தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் ராஜினாமா! மாகாணசபையினில் இடம் வழங்கப்படாமையின் எதிரொலி!!