Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள இனவாத அரசினது திட்டமிட்ட இனவழிப்பின் ஒர் அங்கமாக அமைந்த கறுப்பு யூலையின் முப்பதாம் ஆண்டு நினைவேந்தல் நாட்களை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் நினைவேந்தி வரும் நிலையில் கறுப்பு யூலையினை மையப்படுத்தி தபால் அட்டை பிரசாரமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.

அனைத்துலக அரச மற்றும அரசியல் மையங்களை நோக்கி இத்தாபல் அட்டையினை அனுப்பி வைக்குமாறு அனைத்து தமிழ் உறவுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சகம் கோரியுள்ளது.

1958ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு கறுப்பு யூலை உள்ளடங்கலாக தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த அரசுகளின் திட்டமிட்ட வகையிலான படுகொலைகளைகளின் உச்சமாக 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அமைந்துள்ளதென நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் தணிகாசலம் தாயாபரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள தபால் அட்டையில் கறுப்பு யூலையினை மையப்படுத்தி அன்றைய சிறிலங்காவின் அரசுத் தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்கள் பிரித்தானியாவின் டெய்லி ரெலிகிறாப் ஊடகத்துக்கு கூறிய சிங்கள பௌத்த பேரினவாக கருத்தும் மற்றும் தமிழர் சுயநிர்ண உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனை கறுப்பு யூலையினை மையப்படுத்தி கனடாவின் உயர் நீதிமன்றம் 1998ம் ஆண்டு வழங்கிய கருத்தினையும் பதிவிட்டதாக இத்தபால் அட்டையின் பின்புறம் அமைந்துள்ளது.

இத்தகைய பெரும் கொடுமைகள் உதிரிச் சம்பவங்கள் அல்ல. சிங்களத்தின் மகாவம்ச மனோபாவத்தில் ஊறிப்போன தமிழினப் படுகொலை சிந்தனையின் வெளிப்பாடாய் நிகழ்த்தப்படுகின்ற இனஅழிப்பின் வடிவங்களே.

கறுப்புயூலையின் பிதாமகன் ஜே. ஆரும் முள்ளிவாய்க்காலின் பிதாமகன் மகிந்தரும் இயங்கியது, இயங்குவது ஒரு சூத்திரத்தின் அடிப்படையில்தான். தமிழின அழிப்பு என்பதே இச்சூத்திரம் எனவும் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்ட கறுப்பு யூலை நினைவேந்தல் செய்தியில் தெரிவித்திருந்தார்.


0 Responses to கறுப்பு யூலையினை நினைவேந்தி தபால் அட்டை பிரசாரம்! அனைத்துலக அரச, அரசியல் மையங்களை நோக்கி அனுப்புவோம்: தமிழீழ அரசாங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com