இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை
என்று இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்கு அறிவித்துள்ளார்.
ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து இனைத்தவர்களுக்கும் தமது தலைவிதியை தீர்மானிப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கு இந்திய மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றது. குறிப்பாக, இலங்கை தமிழர்களுக்கான அரசியல் அதிகாரப் பகிர்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான யோசனைகள் குறித்து மத்திய அரசு கொண்டிருக்கிற முடிவுகளை மாற்றும் எண்ணங்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசின் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கேள்வியெழுப்பியும், 13வது திருத்த சட்டத்தை இலங்கை நீக்குவதற்கு எடுக்கும் முயற்சிகளை தடுக்கும் அழுத்தங்களை கொடுக்குமாறும் வலியுறுத்தி கடிதமொன்றை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கடந்த 14ஆம் திகதி இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
அந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், இலங்கை தமிழர்கள் பிரச்சினைகள் தொடர்பில் மத்திய அரசின் முடிவுகளின் மாற்றமில்லை என்று அறிவித்துள்ளார்.

0 Responses to இலங்கை தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை: இந்தியப் பிரதமர் அறிவிப்பு