Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்தர பிரதேச மாநிலத்தின் பிரதாப்கர் எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு குக் கிராமத்தில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோரின் ஐந்து பிள்ளைகளையும் அந்த ஊர் மக்கள் சுடுகாட்டுக்கு சென்று தங்குமாறு ஒதுக்கிவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எயிட்ஸ் நோயால் இறந்தவர்களின் மகன்கள் 4 பேரும் தற்போது ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள சுடுகாட்டில் அவர்களின் பெற்றோரின் கல்லறைக்கு அருகில் கூடாரம் அமைத்து அங்கு 2 மாதமாக தங்கிவந்துள்ளனர். ஊரில் இருந்து யாராவது உணவு கொடுத்தால் அதை வாங்கிச் சாப்பிட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் எதேர்ச்சையாக ஊடக கவனம் பெற்றதை தொடர்ந்து, மாநில சுகாதாரக் குழுவினர் அங்கு சென்று சிறுவர்களுகு எயிட்ஸ் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.  இதன் போது அவர்களுக்கு நோய்ப் பாதிப்பு இல்லையென்றால் மாத்திரமே அவர்களை மீண்டும் ஊருக்குள் விடுவோம் என உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே உடனடியாக  அரசின் கவனத்திற்கு இவ்விடயம் வந்ததும், அவர்களுக்கு இலவச வீடு ஒதுக்கீடு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் உடனடியாக அவர்களை சுடுகாட்டில் இருந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு மாற்றும் படி உத்தரவிட்டுள்ளதாகவும்  மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

0 Responses to எயிட்ஸில் பெற்றோர் இறக்க, பிள்ளைகளை சுடுகாட்டில் சென்று தங்குமாறு உத்தரவிட்ட உத்தரபிரதேச கிராமம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com