கடந்த ஜூன் மாதம்
26-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்
ஜாக்சன், ஜஸ்டின் உள்பட 4 பேர் திடீரென்று காணாமல் போயினர். இலங்கை
கடற்கரையோரம் ஒதுங்கிய மீனவர்களை இலங்கை கடலோரக் காவல்படையினர் பிடித்து
வைத்திருந்தனர்.
இலங்கை
முகாமிலிருந்த அவர்களை இந்திய கடற்படையிடம், இலங்கை கடற்படையினர் சர்வதேச
கடல் எல்லை பகுதியில் 01.07.2013 திங்கள்கிழமை மதியம் ஒப்படைத்தனர்.
காற்றின் வேகம் அதிகரித்ததால் மூன்று மணி நேரத்தில் கரை திரும்ப வேண்டிய
நான்கு மீனவர்களும் இரவு 10.15 மணிக்கு கரை திரும்பினர். மீனவர்களை கண்ட
உறவினர்கள் அவர்களை கட்டிப்பிடித்து தங்களது அளவிலா மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினர்.
நா.ஆதித்யா
0 Responses to இலங்கையிலிருந்து திரும்பிய ராமேஸ்வர மீனவர்கள்!