Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 14.10.2012ல் குமரி மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜராக 01.07.2013 திங்கள்கிழமை அவர் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வக்கீல்களுடன் நாகர்கோவில் கோர்ட்டுக்கு வந்தார். இவர் காலம் தாழ்த்தி 11.30 க்கு வந்தார்.
அவரை பார்க்கவும், வழக்கில் ஆஜராகவும், தே.மு.தி.க. தொண்டர்களும், வக்கீல்களும் கோர்ட்டு முன்பு கூடி நின்றனர். விஜயகாந்த் கோர்ட்டுக்குள் நுழைந்ததும், தே.மு.தி.க. வக்கீல்களும், தொண்டர்களும் அவரை பின் தொடர்ந்து கோர்ட்டுக்குள் சென்றனர். 

சிலர் கோர்ட்டு வளாகத்தில் விஜயகாந்தை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். இதற்கு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த வக்கீல்களும், அரசு வக்கீல் ஞானசேகரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோர்ட்டுக்குள் கோஷமிடுவோரை கோர்ட்டு வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தும் படி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். 
இதையடுத்து கோர்ட்டு அறையில் இருந்து வழக்கு விசாரணைக்கு வந்தவர்களை தவிர மற்றவர்கள் வெளி யேற்றப்பட்டனர். அப்போது தே.மு.தி.க. வக்கீல்களுக்கும், கோர்ட்டில் இருந்த மற்ற வக்கீல்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு மூண்டது. இதில், சிலர் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட வக்கீல்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிலைமை விபரீதமானதை தொடர்ந்து கோர்ட் முன்பு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

படங்கள்: ராம்குமார்

0 Responses to கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர்! வக்கீல்கள் கைகலப்பு, போலீஸ் தடியடி! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com