Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சேந்தமரம் பக்கமிருக்கும் துரைசாமியாபுரம் கிராம த்தை சேர்ந்தபுரம் வெள்ளையப்பன்.  பள்ளிப்படிப்பு முடிந்தவுடனேயே ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்டு அதை மேற்கொண்டவர் வெள்ளையப்பன்.

இதன் காரணமாகவே வெள்ளையப்பன் திருமணம் செய்துகொள்ளவில்லை.  தனது தாய்-தந்தையை இழந்தவர் 20 வயதிலேயே கிராமத்தை விட்டு வெளியேறி வேலூரில் ராமகிருஷ்ணா மடத்தில் தங்கியி ருந்து ஆன்மீக பணிகளை மேற்கொண்டவர்.  ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஈடுபாடு கொண்டவர். 

இந்து முன்னணியில் தீவிரமாக செயல்பட்டவர்.  அதனால் அவருக்கு இந்து முன்னணி மாநில செயலர் பதவி அவருக்கு தரப்பட்டது.  இதனிடையே நேற்று மர்ம கும்பலால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவரவே, அவரது கிராமத்தில் உள்ள உறவினர்கள் சோகத்திலும் துக்கத்திலும் உள்ளனர்.  அவரது சகோதர் கந்தசாமி பேசும்போது,  ‘’என சகோதரன் ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவன்.

யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாதவர்.  அவர் கொலை செய்யப்பட்டது எங்களுக்கு பெரிய இழப்பாகவும் வேதனையாகவும் உள்ளது.  இது தொடர்பான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமெண்டும்’’என்றார்.


 

0 Responses to வெள்ளையப்பன் வெட்டிக்கொலை ; சொந்த கிராமத்தினர் சோகம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com