Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் ஆதரவுடன் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து 2013  இரண்டாவது தடவையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான ஓல்னே சூபா என்னும் இடத்தில் நடைபெற்றது.

ஆரம்பநிகழ்வாக ஈகைச்சுடரினை மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு வரவேற்பு மங்கள விளக்கினை பரப்புரைப்பொறுப்பாளர் மற்றும் ஓல்னே சூபா தமிழ்ச்சங்க தலைவர் திரு. விசுவநாதன் அவர்களும் எற்றி வைக்க அதனைத்தொடர்ந்து மங்கள விளக்கினை நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரித்தானியாவில் இருந்து வந்து கலந்து கொண்ட கலைமாமணி திருமதி . பிறேமிளாதேவி ரவீந்திரன் அவர்களும், கலைபண்பாட்டுக்கழக பொறுப்பாளர் திரு. நிதர்சன் அவர்களும், தமிழச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

அதனைத்தொடர்ந்து  பிரதம விருந்தினர் அவர்கள் வரவேற்கப்பட்டார்.  ஆறு வயதில் தனது நடனத்தை பயின்று தனது 14 வயதில் வித்திவான் வீரமணி ஐயாவிடம் எமது தாயகப்பாடலான மீன்மகள் பாடுகின்றாள் மட்டுநகர் வாவியிலே பாடலுக்கு நடனம் ஆடி தங்கப்பதக்கம் பெற்று இன்று வரை பல்;வேறு சிறப்பை பரதநாட்டியத்திற்கு பெற்றுக்கொடுத்து வருபவரும், பல்கலைக்கழக மாணவியும், கலைமாமணி என்கின்ற விருதினை பெற்றுக்கொண்டவரும் 2012ல் பிரித்தானியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தனிநடனத்தை உருவாக்கம் செய்து நடனமாடி பிரித்தானிய பிரதமரின்  பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டவரும் பல்வேறு போட்டிநிகழ்வுகளில் நடுவராகவும், பிரதம விருந்தினராகவும், பல்வேறு வகையில் தமிழினத்திற்கு பரநாட்டியத்தின் மூலம் பெருமை சேர்த்தவர் மக்களின் கரகோசத்திற்கு மத்தியில் மேடைக்கு அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து

•    அபிராமி நாட்டியாஞ்சலி சுரேஸ் ரேணுகா ஆசிரியரின் மாணவிகள் புஸ்பாஞ்சலி நடனத்தை வழங்கினார்கள்.
•    திருமதி. சாரதா அற்புதகுணராசா அவர்களின் மாணவிகள் ' தமிழே உயிரே வணக்கம்'' வரவேற்பு நடனத்தையும்
•    ஆதிபராசக்தி நாட்டியப்பள்ளி ஆசிரியை திருமதி ரூபி தில்லைரூபன்  அவர்களின் மாணவியர் விநாயகர் ஸ்துதி ( ஐதியினையும்)
•    செவரோன் தமிழ்ச்சோலை நடன ஆசிரியை திருமதி. தனுசா மதிந்திரன்  கீர்த்னத்தையும் தனது
•    ஓள்னே சூபுவா மாணவிகள் புஸ்பாஞ்சலி ( கீர்த்தனத்தையும் )
•    தொர்சி தமிழ்ச்சோலை ஆசிரியை திருமதி. செந்தில்குமரன் கலைவாணி அவர்கள் அம்மன் நாட்டியத்தையும்
•    நியூலி சூர்மாறன் தமிழ்ச்சோலை நடன ஆசிரியை செல்வி. நிருசாந்தி சுந்தரலிங்கம் நாட்டிய நாடகத்தையும்
•    புளோமினல் தமிழ்ச்சோலை நடன ஆசிரியை திருமதி. றெமின்ரா றோஸ் அவர்களின் மாணவிகள் வரவேற்பு நடனத்தையும்
•    பொபினி தமிழ்ச்சோலை நடன ஆசிரியை திருமதி. மஞ்சுளா அவர்களின் மாணவிகள் சிவன் நடனத்தையும்
•    குசன்வில் தமிழ்ச்சோலை நடன ஆசிரியை திருமதி. ரூபி தில்லைரூபன் அவர்களின் மாணவிகள் தமிழின் பெருமை நடனத்தையும்
•    பரிசு 20 தமிழச்சோலை நடன ஆசிரியை nஐயரஞ்சனி இராNஐந்திரகுமார் அவர்களின் மாணவிகள் திருப்புகழ் கௌத்தம் நடனத்தையும்
•    நந்தியார் தமிழச்சோலை நடன ஆசிரியை திருமதி. சுகிர்தா அவர்களின் மாணவிகள் பாதச்சலங்கையாட என்ற தமிழின உணர்ப்பாடலுக்கும்
•    சோதியா கலைக்கல்லூரி நடன ஆசிரியர் திருமதி. அனுசா மணிவண்ணன் அவர்களின் மாணவிகள் பத்மாசுரன் நாட்டிய நாடகத்தையும்
•    சேர்ஐp பொந்துவாஸ் மற்றும் திறான்சி தமிழ்ச்சோலை நடன ஆசிரியர் திருமதி றொனி செல்வராசா அவர்களின் மாணவிகள் சிவ நடனத்தையும், நிருத்தாஞ்சலி நடனத்தையும்
•    நாட்டிய சாஸ்த்திரப்பள்ளி நடன ஆசிரியர் திருமதி. செலினா மகேஸ்சுவரன்  அவர்களின் மாணவிகள் கீர்தனத்தையும்
•    வெர்சாய் தமிழ்ச்சோலை நடன ஆசிரியை திருமதி டேஸ்னி அவர்களின் மாணவியர் பரதம் ( நிருத்த கணபதியே ) நடனத்தையும்
•    தென் இந்திய கலைபண்பாட்டுக்கழகம் நடன ஆசிரியை திருமதி. ரேணுகா அவர்களின் மாணவிகள் சப்தஸ்வரங்கள் நடனத்தையும்
•    நோய்Nஐhன் சூர் மான் நடன ஆசிரியை திருமதி. சாரதா அவர்களின் மாணவிகள் கும்மி நடனத்தையும்
•    ஓபவில்லியே தமிழ்ச்சோலை நடன ஆசிரியை றொபின்சன் அமலதாஸ் சுதர்சினி அவர்களின் மாணவிகள் புஸ்பாஞ்சலி நடனத்தையும் வழங்கியிருந்தனர்.

இதில் சிறப்புரையாற்றிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பரப்புரைப்பொறுப்பாளரும், மக்கள் தொடர்பாளருமான திரு. மேத்தா அவர்கள் உரையாற்றும் போது சிறப்பு விருந்தினர் இங்கு வந்திருப்பதுவும், இங்கு வாழும் எமது குழந்தைகளினதும், நடன ஆசிரியர்களினதும் திறமைகளையும் வளர்ச்சி பற்றி பார்ப்பதோடு மட்டுமல்லாது அவர்களின் மேன்மையான வளர்ச்சிக்கு அறிவுரைகளும், ஆலோசனைகளும் இவரிடம் இருந்து எதிர்பார்ப்பதோடும் கடந்த வருடம் தமிழ்நாட்டில் வேலுநாச்சியார் என்கின்ற நாட்டிய நாடகத்தின் நெறியாளர் மதிப்புக்குரிய சிறீராம் ஐயா அவர்களின் ஆசியுடன்  தொடங்கப்பட்டதையும், இங்கு வாழும் எமது குழந்தைகளின் தேசப்பற்றையும், விடுதலைக்கு வித்தான மாவீரர்களையும், மக்களையும், மண்ணையும் எவ்வளவு தூரம் நேசிக்கின்றார்கள் அதற்கு நடனமூலம் எவ்வளவு தூரம் உயிர்கொடுத்து வருகின்றனர் என்பதையும் அதற்கான போட்டியாக நடைபெற்று வரும் வன்னிமயில் விருதுக்கான போட்டியில் நாம் பார்க்கின்றோம் என்றும் அதேபோலவே பரதத்திலும் எமது குழந்தைகள் எவ்வளவு தூரம் திறமைசாலிகள் என்பதை வெளிக்காட்டும் ஒரு களமாகவே  பரதநாட்டிய நிகழ்வாக இந்த தாம் தீம் தகதிமி தா என்னும் சிகழ்வை நடாத்தப்படுகின்றது என்றும் இந்த ஆண்டு எமது குழந்தைகள் கல்வியோடு தொடர்ச்சியாக இடைவெளியில்லாது ஒவ்வொரு போட்டிகளிலும் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாது இந்த நடனத்திலும் பங்கு கொண்டு சிறப்பித்ததும் அதற்கான பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள் என்றும் கூறியிருந்தார். இந்த போட்டியில் முதற்தடவையாக நாட்டியநாடகங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதாலும் காலத்தையும் நேரத்தையும் கவனத்திற் கொண்டும் சுழற்சி முறையில் நடனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் மேலதிகமாக நடனங்கள் நிகழ்சியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை மட்டுப்படுத்தப்பட்டது என்றும் கூறியிருந்தார்.

 பிரதமவிருந்தினர் தனுது உரையில் பிரான்சில் வாழும் இந்தக்குழந்தைகளின் நடனத்திறமையையும், ஆசிரியர்களின் திறமைகளையும் இந்த பிள்ளைகளின் மூலமாக காணக்கூடியதாக இருந்தது என்றும், நடைபெற்ற நாட்டிய நாடகங்கள் பற்றியான விமர்சனங்களையும் கூறியிருந்தார். அவருக்கான மதிப்பளித்தலை கலைபண்பாட்டுக்கழகப்பொறுப்பாளர் திரு. நிதர்சன் அவர்கள் நினைவுச்சின்னம் வழங்கி மதிப்பளித்தார்.

இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக 93 மாவட்ட ஆளும் கட்சி வேட்பாளர் அவர்களும், ஒன்லிசூபா மாநகர முதல்வர் மற்றும் உதவி முதல்வர், கலைப்பிரிவுப்பொறுப்பாளர்கள் என பலர் வந்திருந்து நடனத்தை கண்டு களித்ததுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி மதிப்பளித்தனர்
நிகழ்வுகள் யாவும் சிறப்பாகவும், விரைவாகவும் நடைபெற்று முடிந்திருந்தன.

0 Responses to பிரான்சில் நடைபெற்ற தாம் தீம் தகதிமி தா மாபெரும் பரதநாட்டிய நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com