வல்வெட்டித்துறையின் தீருவில் மாவீரர் துயிலுமில்லத்தை காப்பாற்ற
முற்பட்டுள்ளதாக தெரிவித்து கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவர்
கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் ஆனந்தராஜ் மற்றும்
பிரதி தலைவர் சதீஸ் ஆகியோருக்கெதிராக பொலிஸார் வழக்குகளை தாக்கல்
செய்துள்ளனர்.
முன்னதாக குறித்த தீருவில் பகுதியினில் புதிய பூங்காவொன்றை அமைக்கும் வல்வெட்டித்துறை நகரசபையின் முயற்சிகளை தடுத்து நிறுத்த நீதிமன்றினூடாக தடையுத்தரவு பெற பொலிஸார் முற்பட்டிருந்தனர்.எனினும் அது வெற்றி பெற்றிருக்காத நிலையினில் தற்போது குறித்த காணிக்கெதிராக வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
1989ம் ஆண்டினில் குறித்த காணியினில் பூங்காவொன்றை அமைக்க வல்வெட்டித்துறை நகரசபை முற்பட்டிருந்தது.அதற்கு முன்னணி கட்டடக்கலைஞர்கள் மற்றும் பொறியியலாளர்கள் குழுவொன்று திட்டங்களை வகுத்து முன்னெடுத்துக்கொண்டிருந்த நிலையினில் மரணமடைந்த புலிகளது தளபதிகள் குமரப்பா மற்றும் 11 பேரது நினைவு நடுகல்கள் அங்கு நாட்டப்பட்டு காணியும் புலிகளினால்; சுவீகரிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து அங்கு கிட்டு மற்றும் அவரோடு மரணித்த போராளிகளது நினைவு தூபியும் அங்கேயே அமைக்கப்பட்டிருந்தது.அதன் அங்குரார்ப்பண நிகழ்விற்கு பிரபாகரன் நேரினில் ஆஜரான சம்பவமும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையினில் தற்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த நடுகற்கள் அனைத்தும் கனரக வாகனங்கள் சகிதம் இரவோடிரவாக படையினரால் இடித்தழிக்கப்பட்டுவிட்டது.அத்துடன் குறித்த காணியினை பொலிஸ் நிலையம் அமைப்பதற்கும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்;தது.
இந்நிலையினில் தமது காணியினை வல்வெட்டித்துறை நகரசபை மீண்டும் கையகப்படுத்தி புதிய சிறுவர் பூங்காவொன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன் பிரகாரம் அண்மையினில் அதற்கான அங்குரார்ப்பண நிகழ்வும் நடத்தப்பட்டிருந்தது.இந்நிலையினிலேயே தற்போது பொலிஸார் தீருவில் மாவீரர் துயிலுமில்லங்களை காப்பாற்ற முற்பட்டுள்ளதாக தெரிவித்து கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் ஆனந்தராஜ் மற்றும் பிரதி தலைவர் சதீஸ் ஆகியோருக்கெதிராக் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனா.

0 Responses to தீருவில் புனித பூமி பொலிஸ் நிலையமாம்! விடாப்பிடியாக இலங்கைப்பொலிஸ்!!