கேரளாவில் நடிகை கனகா புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் நடிகை தேவிகாவின் மகள் கனகா நடித்த கரகாட்டகாரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
இதனையடுத்து ரஜினி, பிரபு, கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் வலம் வந்தவரை, 1990 ஆண்டுகளின் இறுதியில் இருந்து பார்க்க முடியவில்லை.
திருமணம் செய்து கொள்ளாத கனகா, 2000ம் ஆண்டில் தனது தாய் இறந்த பிறகு யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் உடல்நலக் குறைவால் அவதிப்படுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் அவர் கேரளாவில் ஆழப்புழாவில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெறும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




0 Responses to புற்றுநோயால் அவதிப்படுகிறாரா நடிகை கனகா?