கட்டுநாயக்க பிரதேசத்தில் மாமனாரினால் தீயிட்டுக் மருமகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது.
கட்டுநாயக்க, குரணை, நத்தா மாவத்தையை சேர்ந்த செல்லப்புலிகே லக் சிகா சுதர்ஸனி ரோஸா என்ற 28 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே கணவரின் தந்தையினால் தீயிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
குறித்த பெண் சந்தேக நபரான கணவரின் தந்தையினால் தீயிட்டு சம்பவத்தை அடுத்து எரிகாயங்களுக்கு உள்ளான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மரணமடைந்த பெண்ணின் மாமனாரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, மருமகளுக்கு தானே தீ மூட்டியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆறாம் திகதி நடைபெறும் எனவும் அன்றைய தினம் சாட்சிகளை மன்றில் ஆஜர் செய்யுமாறும் நீர்கொழும்பு மேலதிக நீதவான் துலானி எஸ் வீரதுங்க உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பிராந்திய உப பொலிஸ் அத்தியட்சகர் பி. ஏ.டி. விஜயரத்னவின் ஆலோசனையின் போரில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 Responses to மாமனாரினால் தீயிட்டு கொலை செய்யப்பட்ட மருமகள்: கட்டுநாயக்கவில் சம்பவம்