ஆப்கானிஸ்தானின் இராணுவத் தலைமை அதிகாரியான ஜெனரல் ஷெர் மொஹம்மட் கரிமி சமீபத்தில் பிபிசி இற்கு அளித்த செவ்வியில், 'பாகிஸ்தான் அரசு மட்டும் தலிபான்களுக்கு அவர்களின் வன்முறையைக் கைவிடுமாறு உத்தரவு பிறப்பித்தால் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் யுத்தத்தினை சில கிழமைகளுக்குள்ளேயே முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியும்!' என சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிபிசி நிருபர் சாராஹ் மொன்டாகுவே இற்கு அவர் அளித்த பேட்டியில்,தலிபான்கள் அனைவரும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் தான் உள்ளனர். அவர்களின் தலைமைப் பீடம் பாகிஸ்தானிலேயே உள்ளது!' எனத் தெரிவித்துள்ளார்.
இவர் பிபிசி வானொலிக்கு அளித்த செவ்வி நாளை பிபிசி 2 வானொலியில் 00:30 BST மணிக்கு ஒளிபரப்பாகின்றது.
இணைய முகவரி
0 Responses to தலிபான்களை பாகிஸ்தானே கட்டுப்படுத்துகின்றது: ஆப்கான் இராணுவத் தலைமை அதிகாரி