Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் எதிர்கால பிரதமராக நரேந்திர மோடியே வருவார் என தான் பிரச்சாரம் செய்வதாக யூடியூப்பில் வெளியான வீடியோ போலியானது என  பாலிவூட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள மறுப்புச் செய்தியில், 2007ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்காக 'Lead India' எனும் பிரச்சார வீடியோ செய்திருந்ததாகவும் அதில் வரும் தனது குரலை மாத்திரம் பிரித்தெடுத்து, தற்போது அதற்கான சில காட்சிகளை இணைத்து இப்புதிய வீடியோவை போலியாக யாரோ வெளியிட்டிருக்கிறார்கள் எனவும் அதிருப்தி வெளியிட்டுள்ள மோடி, இச்செயல் சட்டவிரோதமானது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்காக தான் எவ்வித பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை என்பதை எனது ரசிகர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை அமிதாப்பின் கருத்துக்களுக்கு, மோடியும் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அமிதாப் பச்சனின் மறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும், இந்த வீடியோவை  உருவாக்கியவர்கள் உடனடியாக அமிதாப்ஜியிடம் மன்னிப்பு கோரவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

0 Responses to மோடியே இந்தியாவின் அடுத்த பிரதமர் என தான் பிரச்சாரம் செய்வதாக வெளிவந்த வீடியோ போலியானது : அமிதாப் பச்சன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com