Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே நிகழ்ந்த பஸ் விபத்தில் 37 பேர் பலியாகியுள்ளனர். மலேசியாவின் மிக மோசமான வீதி விபத்தாகவும் இது பதிவாகியுள்ளது.

கெந்திங் ஐஸ்லேண்ட் எனும் சுற்றுலாத் தளத்திற்கு மலைப்பாதை வழியே சென்று கொண்டிருந்த போது பேருந்து, மலை இடுக்கில் கவிழ்ந்து வீழ்ந்ததால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

அளவுக்கு மீறிய பயணிகளை ஏற்றிச்சென்ற இப்பேருந்து விபத்தில் கொல்லப்பட்டவர்கள், சீன, இந்தோனேசிய, பங்களாதேஷ், மற்றும் தாய்லாந்து தேசத்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. காயங்களுடன் மீட்கப்பட்ட 16 பேர் மருத்துவமனனயில் அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 பேருந்தின் கொள்ளளவு 44 பயணிகள் என்கிற போதும், மொத்தம் 53 பேர் இப்பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.

0 Responses to மலேசியா தலைநகர் அருகே பாரிய பஸ் விபத்து - 37 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com