Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மோதல்கள் முடிவுக்கு வந்து நான்கு வருடங்களைக் கடந்துவிட்ட போதிலும் வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எந்தவித தீர்வையும் காணவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது.

 வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்பது தமிழ் மக்களின் விருப்பத்துக்காக அரசாங்கத்தினால் நடத்தப்படவில்லை. மாறாக, இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கிலேயே நடத்தப்படுகின்றது என்று கல்கமுவ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 வடக்கில் வாழும் மக்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானது. அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்ப்பதற்கு எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை. இதனாலேயே அரசாங்கத்தினால் வடக்கு மக்களின் மனதை வெல்ல முடியவில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு அங்கு தொடர்ந்தும் கோலொச்சுகிறது என்றார்.

 ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மக்களுக்கான எந்தவொரு பயனுள்ள விடயங்களையும் இதுவரை செய்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணவில்லை: ஜே.வி.பி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com