கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில்
கலந்து கொள்வது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை
எந்தவித உறுதிமொழியையும் வழங்கவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு
அறிவித்துள்ளது. ஆனாலும், அவரின் வருகை தொடர்பில் பெரும் நம்பிக்கையுடன்
இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய மாநாடுகளில் குறைந்தது 50க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளுவார்கள் என்று கருதுவதாகவும், அதனை கருத்தில் கொண்டே ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சின் பணிகளை கண்காணிக்கும் ஜனாதிபதியின் விசேட உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாடுகளில் கலந்து கொள்ளக் கோரும் இலங்கையின் உத்தியோகபூர்வ அழைப்பு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் புதுடில்லியில் வைத்து விடுக்கப்பட்டது. ஆனாலும், அவர் உடனடியாக பதில்களை எதையும் இதுவரை வழங்கவில்லை
இதனிடையே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முதலமைச்சர்கள் கொழும்பு பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தோடு, குறித்த விடயம் தொடர்பில் கலந்து பேசியே முடிவு எடுக்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் இந்திய மக்களவையில் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பில் மன்மோகன் சிங் உறுதியளிக்கவில்லை: இலங்கை