Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கறுப்புயூலை 83 பலெர்மோ இத்தாலி

பதிந்தவர்: தம்பியன் 01 August 2013

1983 கறுப்பயூலையின் 30வது ஆண்டு நினைவாக இத்தாலி ஈழத்தமிழர் மக்கவையும்  இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து நடாத்திய புகைப்படக் கண்காட்சி.

பலெர்மோ இத்தாலியில் சென்ற 25-07-2013 தொடக்கம் 30-07-2013 வரை ஒர் மாபெரும் புகைப்படக் கண்காட்சி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இத்தாலி அரசியள் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு பாதிக்கப் பட்ட ஈழத் தமிழர்களின் அவலங்களைப்புரிந்து கொண்டு இத்தாலிவாழ் தமிழ் மக்களின்,எதிர்கால அரசியள் செயற்பாடுகளுக்கு, தாங்கள் பூரண ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர்.

இப்புகைப்படகண்காட்சிக்கு வருகை தந்த முக்கிய இத்தாலிப் பிரமுகர்களாக, இத்தாலி கம்னிêஸ்ற் கட்சியின் பலெர்மோ பிராந்திய செயலாளர் திரு. வின்சென்சோ பூமெர்த்தோ அவர்களும், பலெர்மோ மாநகரசபையின் ஆலோசகர் திருமதி. பெதரிக்கா அலூட்சோ அவர்களும், மோப்வ் 139 அமைப்பின் முக்கிய பிரதிநிதி திரு. பீப்போ றூசோ அவர்களும் இத்தாலிக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு வதிவிட உரிமை வழங்குவதற்கு பொறுப்பாளரான திரு.யூஸ்தோ கத்தானியா அவர்களும், இத்தாலி மனித உரிமை அமைப்பின் பலெர்மோ மாநில உறுப்பினர் செல்வி லவுறா றூயிசீ அவர்களும், இவர்களைத் தொடர்ந்து இத்தாலியின் முக்கிய அரசியள் கட்சிகளின் பலெர்மோ மாநில பிரதிநிதிகளும், பயங்கர வாதத்திள்கு எதிரான அமைப்பின் பிரதிநிதிகளும், சட்டவாளர்களும், கல்விமான்களும், பல இத்தாலிப் பொது மக்களும் கலந்து தங்கள் அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்தனர்.

0 Responses to கறுப்புயூலை 83 பலெர்மோ இத்தாலி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com