ஆகஸ்ட்
2 ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பெல் நிறுவனத்தை திறந்து
வைக்க இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வருகை தருகிறார். அதற்கான ஏற்பாடுகள்
தீவிரமாக நடந்து வருகிறது. பாதுகாப்ப ஏற்பாடுகளுக்காக டெல்லியில் இருந்து
சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் வந்திருந்து கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருமயம் வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்று ம.தி.மு.க அறிவித் துள்ளது.
இந்த நிலையில் இன்று புதன் கிழமை மாலை நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை
மேற்கு மாவட்டத் தலைவர் அருள்மொழி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
‘’அனைத்து பொது துறை நிறுவனங் களை தனியார்மயம் ஆக்குவதைக் கண்டித்தும்,
ஈழத் தமிழர் படுகொலைக்கு துணை நின்று வேடிக்கை பார்த்ததை கண்டித்தும்,
தமிழக விவசாயிகள் தற்கொலைக்கு காரணமாக இருந்ததை க ண்டித்தும், தமிழக
மீனவர்கள் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதை தட்டிக் கேட்காததை
கண்டித்தும், இலங்கையில் நடக்கம் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து
கொள்வதைக் கண்டித்தும். மாவட்டத் தலைவர் அருண்மொழி தலைமையில் கருப்பு கொடி
ஆர்பாட்டம்.
இதில் த.ந.சத்தியமூர்த்தி, தரணி.ரமேசு,
செயசீலன், பகதூர்சா, மற்றம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிக் கலந்து கொள்வதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இடம் நாள் அந்த அறிவிப்பில் இல்லை. திடீரென இந்த அறிவிப்பு வெளியானதால் காவல் துறையினரிடம் பரபரப்பாக உள்ளது.
- செம்பருத்தி





0 Responses to திருமயம் வரும் பிரதமருக்கு எதிர்ப்பு : நாம் தமிழர் கட்சி கருப்பு கொடி ஆர்பாட்டம்