Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருச்சியில் தண்டவாளத்தில் உடல் சிதறி கிடந்த 8ம் வகுப்பு மாணவி, பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது அம்பலமாகி உள்ளது.
 
திருச்சி காஜாமலை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அக்பர் பாஷா மகள் தவ்பீக் சுல் தானா (13). தனியார் பள்ளி யில் 8ம் வகுப்பு படித்து வந்த சுல்தானா, கடந்த 14ம் தேதி காலை ரெட்டைமலை அருகில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தார்.

அன்றைய தினமே அரசு மருத்துவமனையில் சுல்தானாவின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் உட லில் இருந்த வலது கையை காணவில்லை. அந்த கையை கண்டுபிடித்து தர வேண்டும். இது மர்ம மர ணமாக இருப்பதால், இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி பெற்றோர் மற்றும் தமுமுகவினர் உடலை பெற மறுத்தனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் சுல்தானாவின் உடல் சவக்கிடங்கி லேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு கலெக்டர் பங்களாவில் கலெக்டர் ஜெயஸ்ரீயுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற் பட்டு உடலை பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்ட னர். அதனடிப்படையில் நேற்று மாலை 4.10 மணியளவில் சுல்தானாவின் உடலை அவரது தாய் மெக பூனிசா மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று தென் னூர் ஜெனரல்பஜாரில் உள்ள பள்ளிவாசலில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் ஜெயசந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவுப்படி, இந்த வழக்கு விசாரணை, ரயில்வே போலீசாரிடம் இருந்து, நேற்று திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட் டது.

இந்நிலை யில் துணை கமிஷனர் அபினவ்குமார் வழிகாட்டுதலின் பேரில் உதவி கமிஷ னர் ஜெயசந்திரன் தலை மையில் இன்ஸ்பெக்டர்கள் சேரன், விஜயபாஸ்கர், சித்ரா ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சுல் தானா தனது நோட்டில் எழுதி வைத்திருந்த 2 செல் போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர். இதில் காஜாமலையை சேர்ந்த உமர்பாரூக், பொன்மலைப்பட்டியை சேர்ந்த வினோத்குமார், எ.புதூரை சேர்ந்த விக்னேஷ், சிவா உள்பட 5 பேரை பிடித்து தனிதனியாக ரகசிய இடத் தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகை யில், சுல்தானாவுடன் அதே பகுதியை சேர்ந்த உமர்பாரூக் பழகி வந்துள்ளார். கடந்த 13ம் தேதி மாலை சுல்தானாவிடம் பேச வேண்டும் என உமர்பாரூக் கூறியுள்ளார். இதையடுத்து சுல்தானாவை பாரூக்கின் நண்பர் ஒருவர் பைக்கில் பிராட்டியூர் வழி யாக இரட்டைமலை கோயி லுக்கு அழைத்து சென்றார்.

அவரை தொடர்ந்து ஒரு பைக்கில் வினோத்குமார், மற்றொரு பைக்கில் உமர்பாரூக், விக்னேஷ் ஆகி யோர் சென்றுள்ளனர். அங்கு எ.புதூரை சேர்ந்த சிவா என்பவர் நின்று கொண்டிருந்தார். 5 பேர் நிற்பதை பார்த்த சுல்தானா அசம்பாவித சம்பவம் நடை பெற போகிறது என நினை த்து அங்கிருந்து ஓட்டம் பிடிக்க முயன்றார். ஆனால் 5 பேரும் வலுக்கட்டாய மாக சுல்தானாவை பலாத்காரம் செய்துள்ளனர்.

நடந்த சம்பவங்களை தாயிடம் கூற போவதாக சுல்தானா கூறியதை அடுத்து ஆத்திரமடைந்த இவர்கள் கல்லால் சுல்தானாவின் தலையில் தாக்கினர். இதில் ரத்தம் பீறிட சுல்தானா மயங்கி விழுந்தார். அதன்பின்னர் நள்ளிரவில் சுல் தானாவை தூக்கிச்சென்று தண்டவாளத்தில் படுக்க வைத்து விட்டு சென்றுள்ளனர் என்றார். சிக்கிய 5 பேரும் பொறியியல் கல் லூரி மாணவர்கள் ஆவார் கள்.

நேற்றுமுன்தினம் இரவு வினோத்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, நேற்று காலை மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும் வினோத்குமார் மயங்கி விழுந்தார். இதையடுத்து டாக்டரிடம் அழைத்து சென்ற போலீசார் சிகிச்சை அளித்த பின்னர் மீண்டும் விசாரணையை துவக்கி உள்ளனர்.


0 Responses to திருச்சி: மாணவியை பாலியல் பலாத்கரம் செய்து கொன்ற வழக்கு: என்ஜினீயர் மாணவர்களிடம் விடிய, விடிய விசாரணை (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com